திட்டிய தயாரிப்பாளர்!.. ஷூட்டிங்கில் அழுது கொண்டிருந்த அஜித்!.. பிரபலம் பகிர்ந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் யாருடைய தயவும் இன்றி மேலே வந்தவர் அஜித்குமார். டீன் ஏஜில் அஜித்துக்கு இரண்டு விஷயத்தில் மட்டுமே ஆர்வம் அதிகம் இருந்தது. ஒன்று பைக் ஓட்டுவது. மற்றொன்று மாடலிங். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். ‘அட நீ பார்க்க அழகா இருக்கே. சினிமாவில் முயற்சி செய்’ என அவரின் நண்பர்கள் சொல்ல அஜித்துக்கும் அந்த ஆசை வந்தது.
அமராவதி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் ஆக்ஷன் கதைகளிலும் நடித்து ரசிகர்களை பெற்றார். இப்போது மாஸ் ஹீரோவாக மாறி 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார். இவருக்கென பெரிய ரசிகர் வட்டாரமே உண்டு.
இப்போது அஜித் எந்த பட விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. தயாரிப்பாளர்களை சந்திப்பதே இல்லை. யார் இயக்குனர்?. யார் தயாரிப்பாளர்? என்பதை அவரே முடிவு செய்கிறார். அவரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அஜித் இப்படி மாறியதற்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது.
அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே படத்தை எடுத்த நிறுவனம் ரோஜா கம்பைன்ஸ். இதன் நிறுவனர் காஜா மைதீன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் அஜித், கார்த்திக், மீனா ஆகியோரை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்து அஜித்தை பார்க்க ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த ஒரு இடத்திற்கு போனோம்.
அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் அஜித்தை திட்டிகொண்டிருந்தார். அஜித்தோ அழுது கொண்டிருந்தார். தயாரிப்பாளர் அங்கிருந்து சென்றதும் அஜித்திடம் சென்று பேசினோம். எனக்கு 22 லட்சம் சம்பளம் வேண்டும் என கேட்டார். அடுத்தநாளே என் அலுவலக்த்திற்கு வர சொல்லி ஒரே செக்காக கொடுத்தேன். அதன்பின் கார்த்தி, மீனாவை வைத்து காட்சிகளை எடுத்தோம்.
ஆனால், 6 மாதம் அஜித் ஷூட்டிங் வரவில்லை. ஒரு படப்பிடிப்பில் இருந்த அவரை நேரில் சென்று கேட்டபோது அவரின் காலை காட்டி விபத்தில் சிக்கிக்கொண்டேன். நடக்கவே முடியவில்லை. விரைவில் அறுவை சிகிச்சை. இது முடிந்தபின் நடிக்க வருகிறேன் என்றார். எனவே, அவருக்கு பதில் பிரசாந்தை நடிக்க வைக்க முடிவெடுத்து போஸ்டரையே அடித்துவிட்டோம்.
அதன்பின் என்னை அஜித் அழைத்தார். சென்றபோது கண்கள் கலங்கியபடி ‘நான் வரமாட்டேன்னு நினைச்சிட்டீங்களா?.. நான் இந்த படத்துல இருக்கணும்’ என சொன்னார். அவர் அழுவதை பார்த்ததும் அருகில் இருந்த இயக்குனர் ராஜ்கபூரிடம் ‘இவர்தான் இந்த படத்தின் ஹீரோ. படம் எடுத்தாலும் சரி.. இல்லையென்றாலும் சரி’ என சொல்லிவிட்டேன். அதன்பின் அஜித்தே அந்த படத்தில் நடித்து கொடுத்தார். படமும் சூப்பர் ஹிட்’ என சொன்னார் காஜா மைதீன்.