ரஜினிக்கு நடிக்க தெரியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்!.. கொளுத்திப்போட்ட வேட்டையன் பட நடிகர்!...

by சிவா |
ரஜினிக்கு நடிக்க தெரியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்!.. கொளுத்திப்போட்ட வேட்டையன் பட நடிகர்!...
X

Rajinikanth: கடந்த 50 வருடங்களாக சினிமா உலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். துவக்கத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் மாறி மாறி நடித்தார்.

ரஜினி கமல்: வசூல் மன்னனாக பார்க்கப்பட்ட அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. ரஜினி வருவதற்கு முன்பு கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், வசூலில் கமலை தாண்டினார் ரஜினி. கமல் நல்ல கதை, வித்தியாசமான புது முயற்சிகள் என பயணித்தபோது ரஜினியோ கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தார்.

அதனால்தான் நாயகன் படத்தோடு வெளியான ரஜினியின் மனிதன் படம் அதிக வசூலை பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் ரஜினி வாங்கியிருக்கிறார். தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் வாங்கியிருக்கிறார். ரஜினி இப்போதுதான் மாஸ் ஹீரோ.

சிறந்த நடிப்பு: ஆனால், அவர்கள், தப்புத்தாளங்கள், முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, ஜானி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை வாங்கியிருக்கிறார். ரஜினியின் நடிப்பை இப்போது விமர்சிக்கும் நபர்களே அந்த படங்களை மேற்கொள் காட்டி ஒப்பிட்டு பேசுவார்கள்.

வேட்டையன்: இந்நிலையில்தான் ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என ஒரு நடிகர் சொல்லியிருப்பது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது. வேட்டையன் படத்தில் நீதிபதியாக நடித்தவர் அலென்சியர். இவர் ஒரு மலையாள நடிகர். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘வேட்டையன் படப்பிடிப்பில் நான் இருந்தபோது ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் இருவருக்கும் நடிக்க வராது என்பதை தெரிந்துகொண்டேன். இதை சொல்வதால் எனக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் வராது என்பதை தெரிந்துதான் சொல்கிறேன்’ என தைரியமாக சொல்லியிருக்கிறார்.

ஒருபக்கம், ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் முடிந்த பின் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

Next Story