யாருப்பா அந்த நபர்.. நான் பார்த்தே ஆகணும்.. அல்லு அர்ஜுனை இம்பிரஸ் பண்ண பிரபலம்!..

by ramya suresh |
யாருப்பா அந்த நபர்.. நான் பார்த்தே ஆகணும்.. அல்லு அர்ஜுனை இம்பிரஸ் பண்ண பிரபலம்!..
X

புஷ்பா 2 திரைப்படம்:

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கின்றது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதேபோல தற்போது 2 மடங்கு வரவேற்பை ரசிகர்கள் புஷ்பா 2 திரைப்படத்திற்கு கொடுத்து வருகிறார்கள்.

புஷ்பா 2 கலெக்சன்:

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் புஷ்பா 2 திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள். கட்டாயம் இந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பது படக்குழுவினரின் கணிப்பு.

அதற்கு ஏற்றார் போல் படம் வெளியான முதல் நாளிலிருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 294 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பழமொழிகளில் வெளியாகி இருக்கின்றது.

டப்பிங் பணி:

தெலுங்கு படத்திற்கு மட்டும் நடிகர் அல்லு அர்ஜுன் டப்பிங் பேசி இருக்கின்றார். மற்ற மொழிகளுக்கு பல நபர்கள் டப்பிங் பேசி இருக்கிறார்கள். அதே போல் புஷ்பா 2 திரைப்படத்திற்கு தமிழில் சேகர் என்பவர் அல்லு அர்ஜுனுக்கு டப்பிங் பேசியிருப்பார். படத்தின் டிரைலர் வெளியான பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் டப்பிங் பேசியது யார் என்று கேட்டிருக்கின்றார். அதற்கு சேகர் என்ற நபர் இன்று கூற உடனே அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறினாராம்.

அவரின் டப்பிங் பார்த்து அல்லு அர்ஜுன் தெலுங்கிலும் சில மாற்றங்களை செய்ததாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து அந்த டப்பிங் செய்த நபர் நேரில் சென்று அல்லு அர்ஜுனை சந்தித்து இருக்கின்றார். அவரை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி அவரை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கின்றார் அல்லு அர்ஜுன். இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story