அல்லு அர்ஜூனின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!. ராஜமவுலிக்கு டஃப் கொடுக்க போறாங்களாம்!...

Allu arjun: தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா நடிகையாக மாறியிருக்கிறார். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் 2 வருடங்களுக்கு முன்பு வெளியானது.
ஆந்திராவில் உள்ள காடுகளில் செம்மரக்கட்டைகளை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. இந்த தொழிலை யார் செய்கிறார்கள்?. அவர்களின் பின்னணி, இதில் இருக்கும் தொழில் போட்டி, அரசியல் என எல்லாவற்றையும் காட்டியிருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து சூப்பர் அடித்தது.
படம் நல்ல வசூலை பெறவே இந்த படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கினார்கள். முதல் பாகத்தின் இறுதியில் கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் அதிகாரியாக வரும் பஹத் பாசிலுக்கு 2ம் பாகத்தில் நிறைய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புஷ்பா 2 வெற்றி என்பதால் புஷ்பா 2-வை அதிக பட்ஜெட்டில் உருவாக்கினார்கள்.
டிசம்பர் 5ம் தேதி வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டிவிட்டது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் 5 நாட்களில் இவ்வளவு வசூலை பெற்றது இல்லை. தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தியிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது.
புஷ்பா 2-வின் இறுதிக்காட்சியில் 3ம் பாகத்திற்கான லீடும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடுத்து புஷ்பா 3-தானா என ரசிகர்கள் எதிபார்த்தார்கள். ஆனால், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் புஷ்பா 3 இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. தெலுங்கில் எல்லா நடிகர்களும் நடிக்க ஆசைப்படும் திரீ விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கிறார்.
ஏற்கனவே இருவரும் இணைந்து அல வைகுந்தபுரமுலோ என்கிற ஹிட் படத்தை கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணையவுள்ளார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘இந்த படத்தின் படப்பிடிப்பு 2025ம் வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. ராஜமவுலி ஸ்டைலில் அசத்தலான இதுவரை திரையுலம் பார்க்காத படி விஸ்வல் காட்சிகளை கொண்ட படமாக இப்படம் உருவாகவுள்ளது’ என பில்டப் கொடுத்திருக்கிறார்.