Categories: latest news

டாடா காட்டிய சல்மான்கான்!.. மீண்டும் கடத்தல் ராஜாவிடம் தஞ்சமான அட்லீ.. 1000 கோடி லோடிங்..

Director Atlee: தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்துக் கொண்ட அட்லீ அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்த அட்லீ ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு பாலிவுட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கும் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெறி திரைப்படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் தயாரித்திருந்தார். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது ஹிந்தியில் லயன் என்கின்ற திரைப்படத்தையும், ஆலா வைகுந்தபுரமுலூ என்கின்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கையும் எடுத்து வருகின்றார் இயக்குனர் அட்லி.

அல்லு அர்ஜுன் அட்லீ: தெலுங்கு சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் ஒருவராக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி உலகம் முழுவதும் 1700 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக உலக அளவில் பேமஸ்-ஆகி இருக்கின்றார் அல்லு அர்ஜுன்.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பு மிகவும் பிரமாதமாக பேசப்பட்டது. இதனால் அவரின் மார்க்கெட் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்திருக்கின்றது. தற்போது அட்லீ நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கழட்டிவிட்ட சல்மான்கான்: ஹிந்தியில் தொடர்ந்து படங்களை இயக்கி வரும் அட்லீ அடுத்ததாக நடிகர் சல்மான்கானை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறி வந்தார்கள். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது சல்மான்கான் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து படத்தை இயக்குவதற்கு அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபய்ங்கர் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை 400 கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ramya suresh

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

36 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago