திருமணத்திற்கு முன் அமிதாப் போட்ட கண்டீசன்! ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் இடையே இதுதான் பிரச்சினையா?
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் அமிதாப் பச்சன் திருமணத்திற்கு முன் ஒரு கண்டீசன் போட்டதாகவும் அதுவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் இடையே விரிசல் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி உலா வருகின்றது. கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து தகவல் தொழில் நுட்பம் நன்கு வளர்ந்த இந்த காலம் வரை ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன்.
இவர் 70களில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் காதலிக்கும் போதே அமிதாப் சில கண்டீசன்களை வைத்தாராம். அதாவது திருமணத்திற்கு பிறகு தனது மனைவி எப்போதும் போல காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேலைக்கு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தாராம்.
மேலும் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும்? யாருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதையும் அமிதாப்பே முடிவு செய்வாராம். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவிக்கவே அமிதாப் ஜெயாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜெயாப்பச்சன் தன் கணவர் அமிதாப்பை பற்றி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அமிதாப் எப்போதும் தன் மனைவி படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு குடும்பத்தையே காத்து வருகிறார் என பல பேட்டிகளில் கூறியதை மிகவும் பெருமையாக பேசியிருக்கிறார் ஜெயாப்பச்சன். இதைதான் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ஒரு வேளை இதுதான் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார்.
தன் குடும்பம் பின்பற்றிய நெறிமுறைகளை தாண்டி ஐஸ்வர்யா ராய் செயல்பட்டதுதான் அபிஷேக் பச்சனுடனான கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.