தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகயுள்ளது. பராசக்தி படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து யாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய குழப்பமே நீடித்தது. முதலில் வெங்கட் பிரபு பெயர் அடிபட்டது. அதன்பின் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பெயர் அடிபட்டது. அதன்பின் குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் பெயரை சொன்னார்கள். சிவகார்த்திகேயனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிபி சக்ரவர்த்தி தெலுங்கு பக்கம் சென்று நானியை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது நடக்கவில்லை.
எனவேதான் சிவகார்த்திகேயன் குட் நைட் இயக்குனர் பக்கம் போனார். ஆனால் எஸ்.கே – சிபி கூட்டணிக்கு பைனான்ஸ் செய்திருந்தவர் எஸ்.கேவின் அடுத்த படத்தை சிபிதான் இயக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார். எனவே சிபியை மீண்டும் அழைத்து வந்தார்கள். ஆனால் சிபியின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை. எனவே மீண்டும் குட் நைட் பட இயக்குனரை அழைத்து கதையை டெவலப் செய்ய சொல்லியிருக்கிறாராம்.
இதுதான் இறுதி என்றும் இதற்கு மேல் இயக்குனரை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்காது என்கிறார்கள். அதோடு இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆரியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்…
விஜய் நடிப்பில்…
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…