ஐய்யயோ ஜெயிலர் 2 திரைப்படத்தில் இந்த நடிகரா?.. ஒவ்வொரு சீனும் சும்மா பறக்கப்போகுது!..

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இளம் நடிகர்களுக்கு இணையாக படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பேசியிருந்தது. பாக்ஸ் ஆபிஸில் வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
மேலும் பாலிவுட் பிரபலம் அமீர் காணும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, விநாயகன், ஜாக்கி ஷரப் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இப்படம் வெளியாகி உலக அளவில் 700 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.
மேலும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சன் பிக்சர் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. அதன்படி பொங்கலுக்கு இயக்குனர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்தை வைத்து அறிவிப்பு புரமோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வெளியாகி youtubeல் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்திலேயே ஏகப்பட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது தொடர்பான தகவலை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள். ஏற்கனவே கன்னட நடிகரான சிவராஜ்குமார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கின்றது.
இதனால் நடிகர் சிவராஜ்குமார் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகர் பாலையாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் ஐயோ அவரா என்று கதறி வருகிறார்கள் மேலும் அவர் இந்த திரைப்படத்தில் நடித்தால் எந்தெந்த பொருட்கள் எல்லாம் அந்தரத்தில் பறக்க போகின்றதோ என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.