தளபதி விஜய் வேறலெவல்!. ஸ்வீட் ஹார்ட்!. புகழ்ந்து பேசி ஹைப் ஏத்தும் பாபி தியோல்!...

Jananayagan: பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பாபி தியோல். கடந்த சில வருடங்களாகவே கோலிவுட்டில் வில்லனாக நடித்து வருகிறார். வித்தியாசமான அதேநேரம் பணக்கார கார்ப்பரேட் வில்லன் என்றால் உடனே இயக்குனர்கள் ‘கூப்பிடு பாபி தியோலை’ என்கிறார்கள். அனிமல் படத்தில் வாய் பேச முடியாத வில்லனாக வந்து கலக்கியிருந்தார்.
அந்த படத்திற்கு பின்னர்தான் அவருக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வர துவங்கியது. பாலிவுட்டில் பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வந்தவர் இவர். 90களில் நீண்ட தலைமுடியுடன் கதாநாயகிகளுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார். அவரின் சில படங்களின் பாடல்களுக்கு தமிழகத்திலும் வரவேற்பு இருந்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்த கங்குவா படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார். கட்டுவாசி கெட்டப்பில் நன்றாகே நடித்திருந்தார். ஆனால், கங்குவா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் பாபி தியோலின் நடிப்பு பேசப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
கங்குவா படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜனரஞ்சகன் படத்திலும் பாபி தியோல்தான் வில்லன். இந்த படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் இது. ஆனாலும், தமிழுக்கு ஏற்றபடி சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் அர்ஜுன் ராம்பல் நடித்த வேடத்தில்தான் தமிழில் பாபி தியோல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரியா மணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய பாபி தியோல் ‘தளபதி விஜயுடன் நடித்து கொண்டிருக்கிறேன். அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட்.. எப்போதும் மிகவும் எளிமையாக இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்’ என பேசியிருக்கிறார்.