யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்!.. பாப்போம்!.. விஜயை கலாய்த்த போஸ் வெங்கட்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:58  )

Actor Vijay: நடிகர் விஜய் நேற்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கும் மேல் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த மாநாட்டில் விஜய் ஆக்ரோஷமாக பல விஷயங்களை பேசியிருக்கிறார். குழந்தை முன்பு ஒரு விஷப்பாம்பு வந்தாலும் அது அதனுடன் விளையாடும். அந்த பாம்புதான் அரசியல். நானும் அதன்முன் விளையாடுவேன். ஏனெனில் எனக்கு பயம் இல்லை. பத்தோடு பத்தாக மாற்று அரசியல் என சொல்லிக்கொண்டு நான் இங்கே வரவில்லை.

மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்திருக்கிறேன். கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். என் தங்கை இறந்தபோது நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனோ அதை போல அனிதா இறந்தபோதும் கஷ்டப்பட்டேன். என்னை அண்ணா என அழைக்கும் தங்களைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அதோடு, சுயநலமாக இருக்கக் கூடாது என்னை இந்த இடத்தில் வைத்திருக்கும் மக்களுக்கு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என அரசியலில் வந்திருக்கிறேன். இது திட்டமிட்டு எடுத்த முடிவு. கண்டிப்பாக பின் வாங்க மாட்டேன். சாப்பாடு என்று சொன்னால் பசி அடங்காது. சாப்பாடு கொடுக்க வேண்டும்.

viijay

அதுபோல, மக்களை உடனே சென்று சேரும் திட்டங்களை போட வேண்டும். சும்மா வாய் உதார் விடக்கூடாது என ஆளும்கட்சியை சீண்டினார். மேலும். திராவிட ஆட்சி என சொல்லிக்கொண்டு ஊழலில் திளைத்து கொள்ளையடிக்கும் குடும்ப சுயநல ஆட்சியே என் அரசியல் எதிரி என திமுகவை நேரடியாக தாக்கினார்.

இதனையடுத்து திமுகவின் பலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘யப்பா உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு.. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்’ என கிண்டலடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவரின் கமெண்ட் பாக்சில் விஜய் ரசிகர்களை அவரை திட்டி வருகின்றனர். உன் கூடவான்னா கேட்குற.. அப்புறம் எதுக்கு நடு ராத்திரியில வந்து டிவிட் போடுற?’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

Next Story