அட அப்படியே இருக்கே!.. இளையராஜா மாதிரியே மாறிட்டாரே நம்ம தனுஷ்!.. வைரல் புகைப்படங்கள்!...

by ராம் சுதன் |

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டில் இசையமைப்பாளராக உருவெடுத்தவர் இளையராஜா. திரைப்படத்திற்கு வருவதற்கு முன் பல நாடகங்களுக்கும், கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் இசையமைத்து வந்தார். அவருடன் அவரின் சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.

சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட இளையராஜா வீட்டில் கிடைக்கும் பொருட்களையே இசைக்கருவிகளாக மாற்றி இசையமைத்து பழகி இருக்கிறார். பள்ளிக்கு தெருவில் நடந்து சென்றபோது எம்.எஸ்.வியின் ஒரு பாடல் அவரை கவர்ந்து இழுத்திருக்கிறது. அதுவே இசையின் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்பின் முறையாக இசையை கற்றுக்கொண்டார். 80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள்உருவானது. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன் போன்ற நடிகர்களும் இளையராஜாவே தங்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அதேநேரம் 90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற புதிய இசையமைப்பாளர்கள் வந்ததால் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் பக்கம் போனார்கள். வீரா படத்திற்கு பின் ரஜினியே இளையராஜா பக்கம் போகவில்லை. அதற்கு பின்னணியில் சில பிரச்சனைகளும் இருந்தது.

யார் வந்தாலும் போனாலும் இன்னமும் இசையோடு பயணித்துகொண்டே இருக்கிறார் இளையராஜா. படத்திற்கு இசையமைப்பது, இசைக்கச்சேரிகள் நடத்துவது, வெளிநாடு சென்று சிம்பனி அமைப்பது என அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஒருபக்கம் அவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் அப்படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், இளமை காலத்தில் இளையராஜா எப்படி இருந்தாரோ அப்படி தனுஷை வடிவமைத்து போட்டோ ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story