ராயன் படம் சூப்பர் ஹிட்!.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்!.. தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு!..
துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு கலையை பயின்றவர். அப்படம் ஹிட் அடிக்கவே அடுத்து காதல் கொண்டேன் படம் உருவானது. அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க மற்ற தயாரிப்பாளர்களும் தனுஷை தேடி வந்தனர்.
அப்படி தனுஷ் நடித்து வெளியான திருடா திருடி படமும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் எல்லோராலும் கவனிக்கப்பட்டார் தனுஷ். தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். மசாலா படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்தார்.
இதனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்கிற இமேஜ் உருவானது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்கள் தனுஷ் என்ன மாதிரியான நடிகர் என்பதை எல்லோருக்கும் காட்டியது. இதுவரை 2 தேசிய விருதுகளையும் தனுஷ் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில்தான் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். அப்படி உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
படத்தில் கதை இல்லை, இரண்டாம் பாதி சரியில்லை, லாஜிக் இல்லை என பலரும் சொன்னார்கள். ஆனால், வசூல்ரீதியாக இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மாறன் திரைபப்டம் இந்திய அளவில் 40 கோடிக்கும் மேலும், உலக அளவில் 50 கோடிக்கு மேலும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மாறன் படத்தை சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறீர்கள். எனது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ரசிகர்கள் ஆகியோரின் ஆசிர்வாதம் இது’ என பதிவிட்டிருக்கிறார்.