Categories: Cinema News latest news

1000 கோடி 2000 கோடிலாம் எதுக்கு?… ராஷ்மிகாவுக்கு அட்வைஸ் பண்ணிய தனுஷ்!.. குபேரா புரமோஷன்ஸ்!…

Kubera: கர்நாடகவை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர்தான் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். அதன்பின் தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். தனது கியூட்டான ரியாக்‌ஷன்களை காட்டி ரசிகர்களை வளைத்தார்.

தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு நடித்த படங்கள் எல்லாமே இவருக்கு ஹிட் படங்களாக அமைந்தது. விஜயின் தீவிர ரசிகை இவர். விஜயுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து ராஷ்மிகா நடனமாடிய ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் 1800 கோடி வசூல் செய்தது. அதேபோல், அனிமல் படம் 1000 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இப்போது தனுஷு நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் வருகிற 20ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே, புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார் தனுஷ். எனவே, குப்பைத்தொட்டியில் பல மணி நேரம் இருந்ததாக கூறினார். இந்த படத்தில் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவர் பேசும்போது ‘1000 கோடி. 2000 கோடி வசூல் எல்லாம் ராஷ்மிகாவிடம் இருக்கிறது. எங்களில் யாரிடமும் அது இல்லை’ என பேசியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் ‘ராஷ்மிகா மீது 1000 கோடி.. 2000 கோடி வசூல் என்கிற டேக் இருக்கிறது. நீங்க எல்லாத்தையும் மறந்துடுங்க.. ஒவ்வொரு படத்துக்கும் குபேரா படத்தில் போட்டதை போல கடின உழைப்பு போடுங்க. அதுதான் ரொம்ப முக்கியம். இந்த வசூல் எல்லாம் அதிர்ஷ்டம். உங்களை தானாக தேடி வரும்’ என தனுஷ் சொல்ல ராஷ்மிகா உணர்ச்சிவசப்பட்டு கொடுத்த ரியாக்‌ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா