Categories: Cinema News latest news

அடுத்தவன் பேர கெடுக்கணும்னே வேலை செய்யாதீங்கடா!.. குபேரா விழாவில் பொங்கிய தனுஷ்!…

Dhanush: நடிகர் தனுஷ் மீது பல வருடங்களாகவே ஒரு கெட்டப்பெயர் இருக்கிறது. அது, சினிமாவில் எந்த பிரபலம் விவாகரத்து பெற்றாலும் அதற்கு தனுஷே காரணம் என சிலர் கிளப்பிவிடுவார்கள். அதற்கேற்றார் போல் தனுஷ் யாருடனெல்லாம் நெருங்கி பழகுகிறாரோ அவர்களில் பெரும்பாலானோர் திருமண வாழ்வை முறித்துக்கொண்டார்கள்.

வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார் அமலாபால். அதன்பின் இருவரும் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்பட்டது. சில மாதங்களில் அமலாபால் தனது கணவரை பிரிந்தார். இதுபற்றி கருத்து சொன்ன அமலாபாலின் கணவரும் இயக்குனருமான ஏ.ஏல்.விஜய் ‘நம்பிக்கை துரோகத்தை ஏற்க முடியாது’ என சொன்னார்.

தனுஷுடன் பழகியவரும் அவரின் மாரி படத்தில் நடித்தவருமான பாடகர் விஜய் யேசுதாஸ் அவரின் மனைவியை பிரிந்தார். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் சகோதரி சவுந்தர்யா தனது கணவரை விவாகரத்து செய்தார். அதேபோல், தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்த பாடகி சுசித்ரா தனது கணவர கார்த்திக்கை பிரிந்தார். தனுஷ் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றெல்லாம் சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.

அதேபோல், தனுஷுக்கு மிகவும் நெருக்கமான ஜிவி பிரகாஷும் தனது மனைவியை பிரிந்தார். மேலும், ஜெயம் ரவி மனைவியை பிரிந்தபோதும் தனுஷின் பெயர் அடிபட்டது. அப்போதெல்லாம் அது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த தனுஷ் குபேரா புரமோஷன் மேடைகளில் இதுபற்றி பேசி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு பேசும்போது ‘என்னைப் பற்றி தவறாக பேசுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. என்னை பற்றி என்ன சொன்னாலும் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களால் ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது’ என கூறினார். இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த விழாவில் தனுஷு கோபமாக பேசினார்.

முன்பெல்லாம் தன்னுடைய வாழ்க்கை உயர வேண்டும் என வேலை செய்தார்கள். இப்போதெல்லாம் அடுத்தவன் உழைப்பு கெடுக்க வேண்டும் எனவும், அடுத்தவன் பெயரை கெடுக்க வேண்டும் எனவும் வேலை செய்கிறார்கள்’ என வெடித்திருக்கிறார் தனுஷ்.

Published by
சிவா