செலிபிரேஷனுக்கு நடுவே தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஸ்வீட்டையும் கொடுத்து கழுத்துல கத்திய வச்சா எப்படி?

by ராம் சுதன் |

நேற்று தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அவருக்கு 50வது திரைப்படம். அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே. சூர்யா, சரவணன், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை ஏஆர்.ரஹ்மான். படத்தை பார்த்த அனைவரும் படத்தை விட ஏஆர் ரஹ்மானின் இசையில் அமைந்த பாடல்களைத்தான் பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே மரியான் திரைப்படத்திலும் ரஹ்மானின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கொலையும் குத்துயிராகவும் படம் இருந்தாலும் தனுஷ் இப்படியும் ஒரு படத்தை எடுப்பாரா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

வெற்றிமாறனுக்கு அண்ணனாக இருப்பார் போல தனுஷ் என்றளவுக்கு படத்தை கொடுத்திருக்கிறார். படம் வெளியாகி இரண்டாவது நாளான இன்றும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அஜித், விஜய்சேதுபதி இவர்கள் வரிசையில் தன்னுடைய 50வது படத்தில் தனுஷும் மாஸ் காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் வெற்றி கொண்டாட்டத்தில் தனுஷ் ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தயாரிப்பு கவுன்சிலிலிருந்து தனுஷுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று தயாரிப்பு சங்கம் மற்றும் வினியோகஸ்தரர்கள் சங்கம் என கூட்டம் போட்டார்களாம். அந்த கூட்டத்தில் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுத்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

இதை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தயாரிப்பில் ஒரு படத்தை எடுத்தாராம் தனுஷ். இடைவேளை வரை படத்தை எடுத்து முடித்த தனுஷ் அதன் பிறகு தொடரவே இல்லையாம். அந்த நேரத்தில் முரளி ராமசாமி பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்க தனுஷ்தான் அவருடைய சொந்தப் பணத்தை போட்டு படத்தை எடுத்திருக்கிறார்,

இருந்தாலும் இடைவேளை வரைதான் எடுத்தாராம். அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் தனுஷ் பிஸியாக இருந்ததனால் இந்தப் படத்தை தொடர முடியாமலேயே போனதாம். இதை பற்றித்தான் நேற்று அந்த கூட்டத்தில் பேசி தனுஷுக்கு ரெட் கார்டு போடப்பட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Next Story