Categories: latest news

3 வருடங்களில் 4 சூப்பர் ஹிட் படங்கள்!. சைலண்டா இருந்து சாதிக்கும் தனுஷ்!…

Actor Dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அண்ணன் செல்வராகவனிடம் சினிமாவையும், நடிப்பையும் கற்றுக்கொண்டவர் தனுஷ். அதன்பின் வெற்றிமாறன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதும் வாங்கினார்.

மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷ் என்றால் இந்திய சினிமா பிரபலங்களுக்கு தெரியும் அளவுக்கு முன்னேறியிருப்பதுதான் அவரின் சாதனையாக பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் தனுஷின் படங்கள் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அல்லது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவரின் படங்கள் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான குபேரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியானது. இதற்கு முன் தனுஷின் வாத்தி படம் தமிழ், தெலுங்கில் உருவானது. அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் இப்போது சினிமாவில் இந்த இடத்தை பிடிப்பதற்கு காரணமாக இருந்தவர் தனுஷ்தான். ஆனால், அவர்கள் இருவருமே இப்போது தனுஷுடன் நெருக்கமாக இல்லை.

ஒருபக்கம் கமர்ஷியல் படங்களிலும், ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார் தனுஷ். பெரிதாக எங்கேயும் அலட்டிக்கொள்வது இல்லை. தன்னை பற்றி பெருமையாக பேசுவதில்லை. குபேரன் பட புரமோஷன் விழாவில் மட்டுமே தன்னைப் பற்றி தவறாக சித்தரிப்பவர்கள் பற்றி பேசினார். என் ரசிகர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என பேசினார்.

ஒருபக்கம், தனுஷ் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். கடந்த 3 வருடங்களில் இவரின் 4 திரைப்படங்கள் 100 கோடி வசூலை பெற்றது. 2022ம் வருடம் வெளியான திருச்சிற்றம்பலம், 2023ம் வருடம் வெளியான வாத்தி, 2024ல் வெளியான ராயன், 2025ம் வருடம் வெளியா குபேரா ஆகிய 4 படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஒருபக்கம் இயக்குனராகவும் தனுஷ் கலக்கி வருகிறார். ராயன் ஹிட்டுக்கு பின் இட்லி கடை என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்து அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். ஒருபக்கம் நடிப்பு, ஒருபக்கம் கதை எழுதுவது, ஒரு பக்கம் இயக்கம் என நிற்காமல் ஓடி வருகிறார் தனுஷ்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago