லப்பர் பந்து இயக்குனருடன் இணையும் தனுஷ்... பயங்கர உஷாருதான்பா... கணக்கு ஒர்க்கவுட் ஆகுமா..?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:36  )

தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர் அந்த வரிசையில் தற்போது இயக்குனராகவும் அசதி வருகின்றார் நடிகர் தனுஷ். பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் அதற்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து மட்டுமே வந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் தனுஷுக்கு இயக்குனர் ஆசை முடிவடையவில்லை.

அதனால் தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்தத் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனராக ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்தடுத்து திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகின்றார். அந்த வகையில் கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்து இருக்கின்றார்.

சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என பிசியாக இருக்கின்றார். அதைத் தொடர்ந்து இயக்குனராக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தன்னுடைய 4வது திரைப்படமான இட்லி கடை என்கின்ற திரைப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு பக்கம் தனது இயக்கம், மற்றொரு பக்கம் நடிப்பு என்று இரண்டிலும் சக்க போடு போட்டு வருகின்றார் நடிகர் தனுஷ்.

தன்னைக் குறித்து எவ்வளவு சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட இளம் நடிகர்கள் நடிப்பில் உருவான திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கியிருந்தார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தார்கள். இதன் மூலம் தமிழரசன் பச்சைமுத்து மிகப் பிரபலமாகி இருக்கின்றார்.

அடுத்ததாக அவர் யாரை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் நடிகர் தனுஷை வைத்து தான் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது லப்பர் பந்து இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இந்த சூழலில் நடிகர் தனுஷும் இட்லி கடை திரைப்படத்தை அவரது தயாரிப்பில் தான் எடுத்து வருகின்றார்.

நடிகர் தனுசையே நாம் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் செய்வோம் என்று ஆகாஷ் பாஸ்கரன் முடிவு செய்திருப்பதால் லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனரையும் தனுஷையும் வைத்து ஒரு படத்தை தயாரித்து விடுவோம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். இதில் தனுஷும் பயங்கர உஷார் தான்.

இந்த தயாரிப்பாளருக்கு நடிகர் தனுஷ் படம் நடித்து கொடுப்பதால் தான் புரொடியூசர் கவுன்சிலிங் ரெட் கார்ட் என எந்த பிரச்சனையும் கிளப்பாமல் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கே திரும்பத் திரும்ப படம் செய்யும்போது கொஞ்சம் நாட்களுக்கு ரெட் கார்ட் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டு காயை நகர்த்தி வருகின்றார் நடிகர் தனுஷ் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

Next Story