Categories: Cinema News latest news

தனுஷ் நடிக்கும் 2 புதிய படங்கள்!.. ஹிட் கொடுத்த இயக்குனர்களை நேக்கா தூக்கிட்டாரே!…

Dhanush: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் தனுஷ். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஒருபக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கலைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனால் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார் தனுஷ். இப்போதெல்லாம் தான் நடிக்கும் படங்களை தானே இயக்கவும் துவங்கிவிட்டார். அப்படி வெளியான ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன், தனுஷின் அண்ணன் செல்வராகவன் என பலரும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை இயக்குவதற்கு முன்பே தன் சகோதரி மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பாதி இயக்கி முடிந்திருந்தார். ராயன் படத்திற்கு பின் அந்த படத்தின் மீதியை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், இந்த படத்தை முடித்தவுடன் இட்லி கடை என்கிற படத்தை இயக்கினார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் நடித்து தேசிய விருது வாங்கிய நித்யா மேனனும் இப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பொறுத்தவரை இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.

இந்த படத்திற்கு பின் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படமும், லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படமும் அடுத்தடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். இதில், விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தை இட்லி கடை தயாரிப்பாளரே தயாரிக்கவிருக்கிறாராம். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

ஒரு படம் முடிந்தவுடனேயே அடுத்த படம் என கொஞ்சமும் கேப் விடாமல் தனுஷ் நடித்து வருவது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Published by
சிவா