விஜய் படம் பண்ண போங்க ஆனா!.. ஹெச்.வினோத்துக்கு செக் வைத்த தனுஷ்!..
Thalapathy 69: பொதுவாக எல்லா இயக்குனர்களும் முன்னணியில் இருக்கும் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், எல்லா நடிகர்களுடனும் இணையும் வாய்ப்பு அமையாது. மணிரத்னமே நாயகன் படத்திற்கு பின் 37 வருடங்கள் கழித்து இப்போதுதான் மீண்டும் கமலுடன் இணைந்திருக்கிறார்.
அதேபோல், தளபதிக்கு பின் இதுவரை அவர் ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை. கதைக்கு எந்த ஹீரோ சரியாக இருப்பார்?.. அந்த நடிகருக்கு விருப்பம் இருக்கிறதா?.. விருப்பம் இருந்தாலும் அவரிடம் கால்ஷீட் இருக்கிறதா? என எல்லாம் சேர்ந்துதான் ஒரு படத்தில் ஒரு நடிகர் நடிப்பது உறுதி செய்யப்படும்.
சில சமயம் நடிகர்களும் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய இயக்குனருக்காக காத்திருப்பார்கள். ஏனெனில், அப்படிப்பட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது தங்களுக்கு அது மைலேஜ் கொடுக்கும் என நினைப்பார்கள். சிலருக்கு அது உடனே நடக்கும். சிலருக்கு தாமதமாகும்.
சிறுத்தை படத்தை சிவா இயக்கி ஹிட் கொடுத்ததும் அவரின் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டனர். ஆனால், தொடர்ந்து 4 படங்கள் அவரின் இயக்கத்தில் நடித்துவிட்டே அவரே அனுப்பினார் அஜித். இப்போது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார் சிவா.
அதேபோல், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார் ஹெச்.வினோத். அதன்பின் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை, துணிவு என 2 படங்களை இயக்கினார். துணிவு படத்திற்கு பின் தனுஷை வைத்து ஒரு படம் அவர் இயக்குவதாக இருந்தது. தனுஷும் வினோத்துக்காக சில மாதங்கள் காத்திருந்தார்.
ஆனால், கமலிடமிருந்து அழைப்பு வரவே அவரிடம் போன வினோத் பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது விஜயை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருக்கிறார். அடுத்து படம் கண்டிப்பாக தனுஷ் என்கிற நிலையில் ‘நீங்கள் திடீரென என்னை அழைத்தால் என்னால் வரமுடியாது.. விஜய் படத்தின் வேலைகள் முடிவதற்கு 3 மாதங்கள் முன்பே என்னிடம் சொன்னால் மட்டுமே என்னால் தேதி ஒதுக்க முடியும்’ என சொல்லிவிட்டாராம் தனுஷ்.
ஒருபக்கம் விஜயோ 2026 தேர்தலுக்கு முன் இந்த படம் வந்தால் போதும் என்பதால் பொறுமையாக எடுங்கள்.. ஒன்றும் அவசரமில்லை என என்கிறாராம். இதை ஹெச்.வினோத் எப்படி சமாளிப்பாரோ!...