Categories: Cinema News latest news

செம பிஸியாக இருக்கும் தனுஷ்!.. ஒரு படத்துக்கு இத்தனை நாள்தான்.. இப்படி சொன்னா எப்படிப்பா!..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷுக்கு தற்போது சாப்பிட, தூங்க நேரம் இருக்கா? இல்லையா? என தெரியவில்லை. அந்த அளவுக்கு பிஸியாக இருந்து வருகின்றார். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு பிஸியாக மாறி இருக்கின்றார். ராயன் படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றது. இதனை தொடர்ந்து தவான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படமும் 90% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக கூறப்படுகின்றது.

அடுத்ததாக எந்த இயக்குனர் படத்தில் நடிக்க போகின்றார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஏனென்றால் இவர் ஏகப்பட்ட இயக்குனர்களை தமிழ் சினிமாவில் கம்மிட் செய்து வைத்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பல இயக்குனர்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கின்றார். தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டாகி இருக்கின்றார்.

அதனை தொடர்ந்து லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கப் போகின்றார் என்று கூறி வந்தார்கள். இப்படி ஏகப்பட்ட திரைப்படங்கள் கையில் இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியையும் விட்டு வைக்கவில்லை.

அங்கு இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடிக்க இருக்கின்றார். தற்போது நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றாராம்.

இப்படத்தை முடித்துவிட்டு எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகின்றார் என்பது தெரியவில்லை. ஆனால் தன்னை கமிட் செய்யும் இயக்குனர்கள் அனைவருக்கும் நடிகர் தனுஷ் ஒரு கண்டிஷன் போட்டு விடுகின்றாராம். அதாவது பல இயக்குனர்களை நடிகர் தனுஷ் கமிட் செய்து வைத்திருப்பதால் ஒரு படத்திற்கு 40 நாள் மட்டுமே கால்சீட் கொடுப்பேன் எனவும், அதற்கு மேல் டைம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறியிருக்கின்றாராம்.

ஒருவேளை கமிட் செய்த பிறகு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இன்னும் சில நாட்கள் கால்சீட் வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் தர மாட்டேன் என்று கூறியிருக்கின்றாராம். இதைக் கேட்டு இயக்குனர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

Published by
ramya suresh