நாளை வெளியாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்!.. திடீரென தனுஷ் வெளியிட்ட வீடியோ...

by சிவா |
நாளை வெளியாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்!.. திடீரென தனுஷ் வெளியிட்ட வீடியோ...
X

NEEK Movie: துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் தனுஷ். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ராயன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

இட்லி கடை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தை இயக்குவதற்கு முன்பே தனது சகோதரி மகன் பவிஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தை முடிக்காமலேயே இட்லி கடை படத்தை இயக்க துவங்கினார்.

அந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட வேலைகளை தனுஷ் மீண்டும் துவக்கினார்.

அந்த படம் முடிந்து நாளை உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா என எதிலும் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில், நாம் இதில் போகஸ் ஆகக்கூடாது. மீடியாக்களின் கவனம் இந்த படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என அவர் நினைத்ததே அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தனுஷ் வெளியிட்ட வீடியோ: இந்நிலையில்தான், திடீரென தனுஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘ராயன் படத்திற்கு பின் நான் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படம் எடுக்கும்போது நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோமோ அதே மகிழ்ச்சி படம் பார்க்கும் உங்களுக்கும் ஏற்படும் என நான் நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள எல்லோரும் தங்களின் எதிர்காலத்தை நோக்கி கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.

அவர்களின் கனவு நிறைவேற வேண்டுமென கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.அவர்களின் இடத்தில் நான் இருந்திருக்கிறேன். அந்த உணர்வு என்ன என்பது எனக்கு தெரியும். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் நாளை வெளியாகிறது. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Next Story