Categories: latest news

தேதிய நோட் பண்ணிக்கோங்க!.. மீண்டும் அதே ஜோடி.. வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ அப்டேட்..!

Actor Dhanush: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இயக்குனர்களை கமிட் செய்து ஒரு டஜன் படங்களை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இதனை பார்த்த பலரும் இவருக்கு தூங்குவதற்காக நேரம் இருக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராயன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களை கமிட் செய்து கையில் வைத்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இதற்கிடையில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசுக்கு தயார் செய்து வைத்திருக்கின்றார். அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தின் இயக்கி இருக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே இவரின் லிஸ்டில் அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இருக்கிறார்கள். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அந்த படம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இணைந்து இருக்கின்றார். நேற்று இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் கூறி வந்த நிலையில் தற்போது படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகை கிருத்தி சனோன் நடிக்க இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேசம், வாரணாசி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 28ஆம் தேதி ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ் ஹிந்தியில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் ராஞ்சனா திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago