ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்! குல தெய்வ வழிபாட்டின் பின்னனி

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் அவருடைய 50வது படமான ராயன் படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது அவர் மீதான மொத்த விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற் போல இருந்தது.

ஆரம்பத்தில் அவரை உருவகேலி செய்ததில் இருந்து சமீபத்தில் சுசீ லீக்ஸ் வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற் போல் படத்தின் டிரெய்லரிலும் அத்தனை அம்சங்களும் இருந்தன. இசை வெளியீட்டு விழாவிலும் போயஸ் கார்டன் வீட்டின் கனவை பற்றி பேசியதும் இன்னும் தனுஷ் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில் தன்னுடைய ராயன் படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக குல தெய்வ வழிபாட்டையும் தன் குடும்பத்துடன் மேற்கொண்டார் தனுஷ். தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூரில் அமைந்த முத்துரங்காபுரம் கிராமத்தில் இருக்கும் கஸ்தூரி அம்மாள் கோயில்தான் அவருடைய குலதெய்வமாம்.

கடந்த மாதம் தான் அந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அதற்காக கஸ்தூரி ராஜா 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுத்திருக்கிறார். கும்பாபிஷேகத்துக்கு கஸ்தூரி ராஜா மட்டும் வந்திருந்தாராம். அந்த சமயத்தில் தனுஷ் படப்பிடிப்பிற்காக வெளி நாட்டில் இருந்ததனால் இப்போது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

அப்படியே அருகில் உள்ள ஒரு ஊரில்தான் தாயின் குல தெய்வமான கருப்பசாமி கோயிலுக்கும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டிருக்கிறார் தனுஷ். என்னதான் பெரிய பிரபலமாக இருந்தாலும் குல தெய்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இக்கால தலைமுறையினருக்கு உணர்த்தியிருக்கிறார் தனுஷ்.

ராயன் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரீ புக்கிங் மிகவும் ஸ்பீடாக சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த வெற்றிமாறனாக தனுஷை இந்தப் படத்தின் மூலம் எதிர்பார்க்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.

Next Story