நிம்மதியா சாமி கும்பிட போனா? திருவண்ணாமலையில் தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on: August 8, 2024
---Advertisement---

ராயன் படத்தின் வெற்றியை தமிழகமெங்கும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் அவரின் 50 வது படமாக வெளியானது ராயன். இந்தப் படத்தை தனுஷே இயக்கியிருந்தார். தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்தனர்.

படத்தின் இயக்குனர் ஏஆர் ரஹ்மான். அவரின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பட் ஹிட்டானது. பாடல்களை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.எந்தவொரு நடிகரும் தன்னுடைய 25, 50, 100 வது படங்கள் முறையே பெரிய அளவில் பேசவேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

அந்த வகையில் தனுஷ் அவருடைய 50வது படத்தை அவரே இயக்குவதால் இயக்குனராகவும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டார். தேனியிலுள்ள அவரது கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாட்டை நடத்தினார்.

அவர் வேண்டுதல் வீண்போகவில்லை. எதிர்பார்த்ததையும் விட ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது இணையதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் ராயன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷ் திருவண்ணாமலை சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அதுவும் தன் இரு மகன்களுடன் ருத்ராட்சை மாலையுடன் கோயிலை சுற்றி வலம் வந்தார்.

இந்த நிலையில் இன்னொரு சம்பவமும் திருவண்ணாமலையில் நடந்திருக்கிறது. ஏற்கனவே ஒருவாரமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் தங்கித்தான் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டையும் எழுதி வருகிறாராம். இது தனுஷ் காதுக்கு வர உடனடியாக சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment