தொழிலதிபர் To நடிகர்!. கோடிகளில் புழங்கிய தர்மராஜ் நடிகரான சோகக் கதை!...

by சிவா |
தொழிலதிபர் To நடிகர்!. கோடிகளில் புழங்கிய தர்மராஜ் நடிகரான சோகக் கதை!...
X

Dharmaraj: சினிமா பிச்சைக்காரனை கோடீஸ்வரனாக மாற்றும். அதேபோல், அதே சினிமா கோடீஸ்வரர்களை பிச்சைக்காரனாகவும் மாற்றும். யாருக்கு எது அமையும் என சொல்லவே முடியாது. சொந்த பங்களா, காஸ்ட்லியான கார், கழுத்தில் நகை என வலம் வந்த பல தயாரிப்பாளர்கள் படங்களால் நஷ்டப்பட்டு எல்லா சொத்துக்களையும் இழந்து நடந்து போன சோகக்கதை நிறைய திரையுலகில் இருக்கிறது.

அதனால்தான் இப்போதெல்லாம் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்க தனி தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை. ஏனெனில், அவர்கள் கேட்கும் சம்பளத்தை அவர்களால் கொடுக்க முடியாது. அதோடு, அப்படி கடன் வாங்கி படமெடுத்து அந்த படம் ஊத்திக்கொண்டால் நிலைமை மோசமாகி விடும். விஜயை வைத்து மெர்சல் படமெடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதன்பின் இதுவரை படமே எடுக்கவில்லை.

இதுதான் யதார்த்தம். சினிமாவில் கொடிகட்டி பறந்து ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து இப்போது வேறு துரையில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வரும் பலர் இருக்கிறார்கள். அதேபோல் வேறு துறையில் திறமையாளராகவும், தொழிலதிபராகவும் விளங்கி நஷ்டமடைந்து சினிமாவுக்கு வந்து கஷ்டப்படும் நடிகர்களும் சினிமாவில் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் தர்மராஜ்.

இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். இவர் இதுவரை குணச்சித்திர நடிகர் முதல் காமெடி நடிகர் வரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் டிபி கஜேந்திரனை போலவே இருப்பார். சினிமா மீது இருந்த ஆர்வத்தில் முரளியின் இதயம் படத்தில் ஒரு காட்சியிலும் இவர் நடித்திருந்தார். அதன்பின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஜவுளிதுறையில் வியாபாரம் செய்தார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சேதுபதி படத்தில் விசாரணை கமிஷன் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இயக்குனர்களை கவர்ந்தார். அதன்பின் கனா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களிலும் அசத்தி இருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய தர்மராஜ் ‘ஏறுனா ஃபிளைட்.. இறங்குனா கார் என 30 வருடங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு எல்லாவற்றையும் இழந்து இப்போது சினிமாவில் நடித்து வருகிறேன். கோடிகளில் செலவு செய்த நான் இப்போது 200 ரூபாய்க்காக நடிக்கிறேன். துவக்கத்தில் கேலி, கிண்டல்களை சந்தித்தாலும் இந்த அளவுக்கு நான் உயர்ந்ததற்கு காரணம் என் நம்பிக்கையும், என்னிடம் இருந்த திறமையும்தான் என சொல்லி இருக்கிறார் தர்மராஜ்.

Next Story