வடிவேலு காமெடியாலேயே படம் ப்ளாப் ஆச்சு! படத்தின் ஹீரோவே இப்படி சொல்லிட்டாரே
கோலிவுட்டில் நகைச்சுவையில் பெரிய கிங்காக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் கிடைத்த நகைச்சுவை சீன்களில் ஆங்காங்கே தோன்றியவர் அதன் பிறகு முழு நேர காமெடியனாக மாறினார். நகைச்சுவையில் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். ஒரே நேரத்தில் சிந்திக்க வைக்கவும் சிரிக்கவைக்கவும் முடியும் என்றால் அது வடிவேலுவாலால்தான் முடியும்.
ஒரே பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாகுவது உறுதி. அப்படி மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் வடிவேலுவின் காமெடியை பார்த்தால் போதும். அவர்கள் கவலையெல்லாம் பறந்தே போகும். சொல்லப்போனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு வடிவேலுவே மருந்து.
நகைச்சுவையில் நடிக்கும் ஒவ்வொரு காமெடி நடிகரும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சோகங்களை ஒளித்து வைத்துக்கொண்டுதான் நடிக்கின்றனர். கண்ணீரில் மிதந்து மற்றவர்களை சிரிக்க வைப்பதே அந்த காமெடி நடிகர்கள்தான். அப்படி வடிவேலுவும் ஒருவர். தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்தவர்.
காமெடிக்காக தன்னையே அர்ப்பணித்து இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் உண்ணத கலைஞன் வடிவேலு, இந்த நிலையில் வடிவேலுவின் காமெடியாலேயே சூப்பர் ஹிட்டாக இருந்த படம் ப்ளாப் ஆனது என அந்தப் படத்தின் ஹீரோவே சொல்லியிருக்கிறார். அந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.
தெலுங்கில் ஆனந்தம் என்ற பெயரில் வெளியான படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜெய் ஆகாஷ். தெலுங்கில் அந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது மட்டுமில்லாமல் ஜெய் ஆகாஷுக்கு சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைத்ததாம். இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள்.
தமிழிலும் ஜெய் ஆகாஷ்தான் ஹீரோவாக நடித்திருப்பார். தெலுங்கில் அந்தப் படத்தில் காமெடி என்பது ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் வரும். ஆனால் தமிழில் இந்தப் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க அவர் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம். அதனால் இந்த தமிழ் ரீமேக்கில் ஹீரோவுடன் முழுவதுமாக பயணப்படும் ஒரு கேரகடரில் வடிவேலு நடித்திருந்தாராம். அதானாலேயே தமிழில் படம் சரியாக ஓடவில்லை என ஜெய் ஆகாஷ் கூறியிருந்தார்.