Sivakarthikeyan: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை மிஸ் பண்ண நடிகர்! இல்லைனா இன்னிக்கு அமரன் கிடைச்சிருப்பாரா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:18  )

Sivakarthikeyan: இன்று அமரன் திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். படம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே வெகுவாக ஈர்த்திருக்கிறது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வெற்றிவாகை சூடி வருகிறது. அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு மைல் கல்லாக இருக்கும். அவருடைய வளர்ச்சியை பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு சாதாரண ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் அதுவும் பல நடிகர்களை பேட்டி எடுத்த சிவகார்த்திகேயன் இன்று அந்த நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறி இருக்கிறார். தன்னுடைய 18 ஆவது வயதில் தன் அப்பாவை இழந்த சிவக்கார்த்திகேயன் குடும்ப வறுமையின் காரணமாக சின்ன திரையில் நுழைந்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தன் வீட்டை பாதுகாத்து வந்தார்.

இதில் தன் அக்காவை மருத்துவராக்கியும் அழகு பார்த்தார் சிவகார்த்திகேயன். இப்படி படிப்படியாக ஆங்கராக பல மேடைகளை அலங்கரித்து வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை போன்ற ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

ஆனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு அந்தப் படங்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை. அதன் பிறகு தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் அந்தப் படத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் ஜெய் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

அந்த படத்தை பொருத்தவரைக்கும் ஒரு ஹீரோ அராஜகம் செய்து கொண்டு கிராமத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு இளைஞனை பற்றிய கதை. ஆனால் ஜெய் சென்னை சிட்டியில் வளர்ந்த பையன் என்பதால் இதில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் படத்திற்குள் நுழைந்து இருக்கிறார். இந்தப் படம் தான் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற திரைப்படமாக அமைந்தது. ஒருவேளை இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டும் நடிக்காவிட்டால் இன்று இந்த அமரனை நாம் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான்.

Next Story