1. Home
  2. Cinema News

கவுண்டமணி ஒரு ஜென்டில்மேன்!.. ஜனகராஜ் என்ன சொல்றார் பாருங்க!...


70களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்தவர் கவுண்டமணி. பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக வருவார். அதன்பின், கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. இந்த இரண்டு வேடங்களையும் கவுண்டமணிக்கு வாங்கி கொடுத்தவர் பாக்கியராஜ்.

ஏனெனில் இருவரும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் கலக்கி இருக்கிறாராம். நாடகங்களில் அவருடன் செந்திலும் நடித்திருக்கிறார். தூரல் நின்னு போச்சி படம் மூலம் செந்திலையும் தூக்கிவிட்டது பாக்கியராஜ்தான் என்பது பலருக்கும் தெரியாது.

படிப்படியாக வளர்ந்து கவுண்டமணி ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் அதை விட்டுவிட்டு காமெடி ரூட்டுக்கு மாறினார். தன்னுடன் செந்திலையும் வைத்துகொண்டு அவர் கொடுத்த காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 90களில் ஒரு முன்னணி காமெடி நடிகராக மாறினார் கவுண்டமணி.


கவுண்டமணி இருந்தாலே காமெடிக்காக தியேட்டருக்கு போகலாம் என்கிற நிலையும் உருவானது. ரஜினி, கமலை தவிர விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் ஆகியோரின் படங்களில் கவுண்டமணி நிச்சயம் இருப்பார். பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்கே கவுண்டமணி காரணமாக இருந்திருக்கிறார்.

90களில் ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என அதிக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் கவுண்டமணி மட்டுமே. சில படங்களில் ஹீரோவை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சகட்டு மேனிக்கு கிண்டலடிப்பார். அதனாலேயே ரஜினி, கமல் ஆகியோர் இவரை தன்னுடன் நடிக்க வைக்க மாட்டார்கள்.

ரஜினி, கமல் படங்களில் ஜனகராஜே அதிகம் நடிப்பார். சில படங்களில் ஜனகராஜ் கவுண்டமணியிடம் இணைந்தும் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் கவுண்டமணி பற்றி பேசிய அவர் ‘கவுண்டமனி ஒரு ஜென்டில்மேன். வெளிப்படையாக பேசிவிடுவார். உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசமாட்டார். சினிமாவில் முதுக்கு பின்னால் வேற மாதிரி பேசுவார்கள். ஆனால், கவுண்டமணி அப்படி இல்லை. தன்னுடன் நடிக்கும் நடிகர்களிடம் கோபம் வந்தால் முகத்திற்கு நேராக காட்டுவார். அது கூட காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.