Categories: latest news

கவுண்டமணி ஒரு ஜென்டில்மேன்!.. ஜனகராஜ் என்ன சொல்றார் பாருங்க!…

70களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்தவர் கவுண்டமணி. பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக வருவார். அதன்பின், கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. இந்த இரண்டு வேடங்களையும் கவுண்டமணிக்கு வாங்கி கொடுத்தவர் பாக்கியராஜ்.

ஏனெனில் இருவரும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் கலக்கி இருக்கிறாராம். நாடகங்களில் அவருடன் செந்திலும் நடித்திருக்கிறார். தூரல் நின்னு போச்சி படம் மூலம் செந்திலையும் தூக்கிவிட்டது பாக்கியராஜ்தான் என்பது பலருக்கும் தெரியாது.

படிப்படியாக வளர்ந்து கவுண்டமணி ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் அதை விட்டுவிட்டு காமெடி ரூட்டுக்கு மாறினார். தன்னுடன் செந்திலையும் வைத்துகொண்டு அவர் கொடுத்த காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 90களில் ஒரு முன்னணி காமெடி நடிகராக மாறினார் கவுண்டமணி.

கவுண்டமணி இருந்தாலே காமெடிக்காக தியேட்டருக்கு போகலாம் என்கிற நிலையும் உருவானது. ரஜினி, கமலை தவிர விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் ஆகியோரின் படங்களில் கவுண்டமணி நிச்சயம் இருப்பார். பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்கே கவுண்டமணி காரணமாக இருந்திருக்கிறார்.

90களில் ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என அதிக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் கவுண்டமணி மட்டுமே. சில படங்களில் ஹீரோவை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சகட்டு மேனிக்கு கிண்டலடிப்பார். அதனாலேயே ரஜினி, கமல் ஆகியோர் இவரை தன்னுடன் நடிக்க வைக்க மாட்டார்கள்.

ரஜினி, கமல் படங்களில் ஜனகராஜே அதிகம் நடிப்பார். சில படங்களில் ஜனகராஜ் கவுண்டமணியிடம் இணைந்தும் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் கவுண்டமணி பற்றி பேசிய அவர் ‘கவுண்டமனி ஒரு ஜென்டில்மேன். வெளிப்படையாக பேசிவிடுவார். உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசமாட்டார். சினிமாவில் முதுக்கு பின்னால் வேற மாதிரி பேசுவார்கள். ஆனால், கவுண்டமணி அப்படி இல்லை. தன்னுடன் நடிக்கும் நடிகர்களிடம் கோபம் வந்தால் முகத்திற்கு நேராக காட்டுவார். அது கூட காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago