Jeyamravi: பிரதர் படத்த குழி தோண்டி பொதச்சாச்சு!.. அதுக்குள்ள இன்னொன்னா..? வெளியான புது அப்டேட்..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஜெயம் ரவியின் நிலைமை தற்போது மிக கவலைக்கிடமாக உள்ளது. எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் பிரதர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. படம் வெளியானது முதலே மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததாலும், அதிலும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தால் அதில் பிரதர் திரைப்படம் காணாமல் போய்விட்டது என்று பலரும் கூறி வந்தார்கள்.
அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படங்களுடன் இல்லாமல் வேறு ஒரு தேதியில் வெளியிட்டிருந்தால் ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கு மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கும். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட்டு பல்பை வாங்கிக் கொண்டார் ஜெயம் ரவி. படத்தின் வசூல் மிக மோசமாக இருந்ததால் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு வெளியாகும் படங்களுக்கு அதிக அளவு பிரமோஷன் செய்வார்கள். ஆனால் பிரதர் திரைப்படத்திற்கு எந்த வித ப்ரமோஷன் செய்யாததும் ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. பிரதர் திரைப்படம் தான் கை கொடுக்கவில்லை அடுத்த திரைப்படமாவது வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று முழு கவனத்துடன் இருக்கின்றார்.
அப்படி அவர் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கி இருக்கின்றார். மேலும் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.
மேலும் யோகி பாபு, மனோ, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில் ஆடியோ உரிமையை டி சிரிஸ் நிறுவனம் வாங்கியிருக்கின்றது சமீபத்தில் கூட இப்படம் தொடர்பான வீடியோ கிளிப்பிங் வெளியானது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிரதர் திரைப்படத்தின் தோல்வியை இந்த திரைப்படம் சரிகட்டி விடும் என்கின்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றார் நடிகர் ஜெயம் ரவி, மேலும் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படங்களின் கதைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.