மறுபடியுமா? கமலுடன் இணையும் ஜெயம் ரவி.. விட்டத பிடிக்க பக்கா ப்ளானோட இருக்காரே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:50  )

ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு நடுவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது பிரதர் திரைப்படம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த பிரதர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். ஒரு ஃபுல் ஃபேமிலி எண்டெர்டெய்னராக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

மனைவியுடனான பிரச்சினைக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் பிரதர் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட ஒரு வரவேற்பை பெற போகிறது என்ற ஆர்வம் படக்குழு உட்பட ஜெயம் ரவிக்கும் இருந்தது. ஆனால் இதுவரை ஒரு கலவையான விமர்சனத்தையே படம் பெற்று வருகிறது.

இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெற்றி வாகை சூடி வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி தக் லைஃப் படத்தில் நடிக்க இருந்து அதன் பிறகு அந்த வாய்ப்பு ஏன் பறி போனது என்பதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவிதான் நடிப்பதாக இருந்தது. கூடவே துல்கர் சல்மானும் நடிப்பதாக இருந்தது. அதன் பின் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலக ஜெயம் ரவியும் அடுத்து விலகினார். அவருக்கு பிறகுதான் சிம்பு இந்தப் படத்திற்குள் நுழைந்தார். ஆனால் அதற்குள் சிம்பு படத்தில் நுழைந்ததால்தான் ஜெயம் ரவி விலகினார் என்ற ஒரு செய்தி வெளியானது.

ஆனால் உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சினை காரணமாகத்தான் ஜெயம் ரவி படத்தில் நடிக்க முடியாமல் போனதாக அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வாய்ப்பை தவறவிட்டோமே என்ற வருத்தத்தில் இப்போது வரை இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் மீண்டும் கமலுடன் நடிப்பேன் என்றும் ஜெயம் ரவி கூறியிருக்கிறார். நாம நினைச்சது நடக்காம இருந்திருக்கா? அதனால் மீண்டும் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு வரும். மீண்டும் கமலுடன் நடிப்பேன் என்று உறுதியாக ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

Next Story