சக்சஸ் மீட்ல ஜீவாவைக் கலாய்த்த நிருபர்கள்... அதுக்கு என்ன பதில் சொல்றாரு பாருங்க...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:08  )

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் பிளாக். கேஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடி பிரியா பவானி சங்கர். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

படம் ரொம்பவே வித்தியாசமான கதைகளம். இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். இது தமிழ்சினிமா ரசிகர்களுக்குப் புது உணர்வைத் தரும். பிளாக் படத்து சக்சஸ் மீட்டுக்காக நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது நடந்த சில சுவையான தகவல்களைப் பார்ப்போம்.

பிளாக் படத்து சக்சஸ் மீட்ல ஜீவா சில விஷயங்களைப் படம் குறித்துப் பேசினார்.

படம் ரொம்பவே நல்லா போகுது. ஆடியன்ஸ்சுக்கும் இந்தப் படத்தோட சில விஷயங்கள் அவங்களுக்கே புதுமையாகத் தான் இருந்தது. 9 மாதத்துக்கு முன்னாடியே இந்தப் படம் ரிலீஸாக வேண்டியது.

ஆனா அதுக்கான நேரம் எங்களுக்கு அமையல. இப்போ தான் அதுக்கான நேரம் வந்தது. இதுக்கு அப்புறம் தீபாவளிப்படங்கள் வருது. அதனால தான் வேட்டையன் படம் ரிலீஸான மறுநாளே இது ரிலீஸ் ஆனது.

அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் படம் உங்களுக்கே புரியலன்னு சொன்னீங்க. ஆடியன்ஸ்சுக்கு எப்படி புரியும்னு கேட்டாங்க. புரியலன்னு எல்லாம் இல்ல. நல்லா புரிஞ்சுது. அது சும்மா என்டர்டெயின்மெண்டுக் காக சொல்றது. நிறையவாட்டி புரிஞ்சித் தான் நடிச்சிருக்கேன்.

புரியலன்னு எல்லாம் இல்ல. கான்டம்ஃப்யூசிக் தெரிஞ்சவங்களுக்கு இது புரியும். உங்களுக்கு அது தெரியுமான்னு கேட்டுட்டு லேசாக சிரித்தார். அப்படின்னா ஒன்றுமே இல்லை. குழப்பத்தைப் பற்றிப் புரிஞ்சவங்களுக்கு என்பதைத் தான் ஆங்கிலத்தில் (contumfusic) அப்படி பேசியுள்ளார் ஜீவா.

பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு பலரும் நோ கமெண்ட்ஸ் சொல்லித் தப்பிப்பது தான் வழக்கம். ஜீவாவைப் பொருத்தவரை கோ படத்தில் ரிப்போர்ட்டராக நடித்தவர். சினிமாவுக்காக பல காட்சிகளில் மெனக்கிடும் நடிகர்கள் ஒரு சிலர் தான் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர். இதைக் கூட சமாளிக்க மாட்டாரா என்ன?

Next Story