ஊத்துக்குளி ஜமீன் வாரிசை கரம் பிடித்த காளிதாஸ்.. குருவாயூரில் கோலாகலமாக நடந்த திருமணம்!..

Published on: March 18, 2025
---Advertisement---

ஜெயராம் மகன் காளிதாஸ்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். இவர் நடிப்பில் தமிழில் வெளியான முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகின்றது. ஜெயராம் அவர்களின் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

இவர் தமிழில் மீன் குழம்பும் மண் பானையும், பூமரம், ஒரு பக்க கதை, பாவகதைகள் போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். இவர் கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு தம்பி கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்து வருகின்றார் காளிதாஸ் ஜெயராம்.

காளிதாஸ் ஜெயராம் காதல்:

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரணி களிங்கராயர் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். அதனை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. தாரணி களிங்கராயர் 2021 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் 3-வது இடம் பிடித்தவர்.

வரவேற்பு நிகழ்ச்சி:

இதுக்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். இந்த விழாவில் பேசிய ஜெயராம் ‘இன்று என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். காளிதாஸ் திருமணம் எங்களுக்கு ஒரு கனவு. படப்பிடிப்புக்கு செல்லும் போது காளிங்கராயர் குடும்பத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த பெரிய குடும்பத்தில் இருந்து தாரணி என் வீட்டிற்கு மருமகளாக வருவது கடவுளின் புண்ணியம் அவர் எங்களுக்கு மருமகள் அல்ல மகள்’ என்று பேசி இருந்தார்.

ஜமீன் பரம்பரை:

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம் செய்து கொள்ளும் தாரணி ஒரு ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊத்துக்குளி ஜமீன் வாரிசு ஆவார். இவரை தான் காளிதாஸ் ஜெயராம் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிக விமர்சையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

குருவாயூரில் திருமணம்:

காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணி திருமணம் இன்று கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிக விமர்சையாக நடைபெற்ற முடிந்தது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment