கே. பாலசந்தர் பக்கமே தலைகாட்டாத கமல்! இருவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினையா?

இன்று தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்பவர் நடிகர் கமல். இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்பவர். இன்று நடிப்பிற்கு ஒரு அடையாளமாக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கே.பாலசந்தர். அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை கே. பாலசந்தரை பற்றி பேசாமல் இருந்ததே இல்லை.

தன்னுடைய குரு என்று அழகாக அழைப்பார் கமல். இயக்குனர் சிகரம் என கொண்டாடப்பட்ட கே.பாலசந்தர் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் கமல் மற்றும் ரஜினியை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதோடு 9 தேசிய விருதுகள், 12 ஃபிலிம் பேர் விருதுகள், தாதா சாகேப் விருதுகள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் விளங்கியவர் பாலசந்தர்.

சினிமாவில் அவர் இருக்கும் வரை பல புதுமைகளை கொண்டுவந்தவர். ஆரம்பத்தில் நாடக எழுத்தாளராகத்தான் இருந்தார் பாலசந்தர்.குறைவான செலவில் நிறைவான படத்தை கொடுப்பதில் கில்லாடி பாலசந்தர் என இந்த திரையுலகம் அவரை பாராட்டியது.

ஒரு புதுமுக நடிகரோ நடிகையோ யாரா இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் திறமையை எப்படி கொண்டுவரவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் பாலசந்தர். இந்த நிலையில் பாலசந்தர் இயக்கிய உன்னால் முடியும் தம்பி படம் தான் கமல் பாலசந்தர் இயக்கத்தில் நடித்த கடைசி படமாகும்.

இதன் பிறகு அவர் பாலசந்தர் இயக்கத்தில் எந்தப் படங்களிலும் நடிக்க வில்லை. ஏனெனில் உன்னால் முடியும் தம்பி படத்தின் போது பாலசந்தருக்கும் கமலுக்கும் இடையே ஏதோ சிறு கருத்து வேறுபாடு வரவே அதில் இருந்தே பாலசந்தர் படங்களில் கமல் நடிக்கவில்லையாம்.

அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல் இயக்கத்தில் வெளியான மன்மத அம்பு படத்தில் பாலசந்தர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கோலிவுட்டில் இன்னொரு பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கும் ரஜினியை அறிமுகப்படுத்தியதும் பாலசந்தர்தான் என அனைவருக்கும் தெரியும்.

Related Articles
Next Story
Share it