More
Categories: Cinema News latest news

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இனிமே கமலை பார்க்க முடியாதா? எல்லாத்துக்கும் அதான் காரணமா?

தமிழ் சினிமாவில் கமல் என்றால் ஒரு பெரிய என்சைக்ளோபீடியா என்றே சொல்லலாம். அப்படித்தான் அனைவரும் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு கமலுக்கு தெரியாத விஷயம் என்ற ஒன்று இல்லை. தகவல் தொழில்நுட்பத்தை பற்றியும் சினிமாவைப் பற்றியும் மற்ற எந்த துறைகளைப் பற்றி கேட்டாலுமே அத்தனை தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.

தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இன்னும் அவரிடம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. புது புது தகவல் தொழில்நுட்பம் வர வர அவருக்கு உண்டான ஆர்வம் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களை பற்றி அறிந்தவராக இருக்கிறார் கமல்.

அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் முன்னோடியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கமல் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டக் லைப் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்ததாக அமெரிக்கா புறப்படுகிறார் கமல்.

அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீப காலமாக அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு தொழில்நுட்பமாக ஏ ஐ தொழில்நுட்பம் இருந்து வருகிறது. அந்த தொழில்நுட்பத்தை பற்றியும் தான் அறிய வேண்டும் என கமல் விருப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. அதை தெரிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா புறப்படுகிறாராம் கமல்.

அங்கு 90 நாட்கள் தங்கி இந்த தொழில்நுட்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தக் லைஃப் படத்தை முடித்துக் கொண்டு அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரே. இப்பொழுது அமெரிக்கா போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிலைமை என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகின்றன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள் அதற்கு ஒரு பதிலை கூறியிருக்கிறார்கள். அதாவது ஏ.ஐ தொழில் நுட்பத்தை நன்கு தெரிந்து விட்டு ஒரு வேளை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலின் ஏ ஐ தொழில்நுட்பம் கொண்டு கூட நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கிண்டலாக பதில் கூறி வருகிறார்கள். ஆனால் சாத்தியம் இருந்தால் அமெரிக்காவிலிருந்து கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

Published by
ராம் சுதன்