புரொடியூசரா இருந்தா என்ன? ஜோதிகாவை மேடையில் அசிங்கப்படுத்திய கார்த்தி..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:21  )

கோலிவுட்டில் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. ரஜினி , விஜய், அஜித் இவர்களை போல பெரிய பெரிய கமெர்ஷியல் படங்கள் அல்லாமல் தான் பண்ணும் படங்களில் சில கமெர்ஷியல் காட்சிகளை சேர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் கார்த்திக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

25 படங்களுக்கு மேல் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் கார்த்தி. ஆனால் அவர் பேச்சில் ஒரு அனுபவம் இருக்கும். ஏற்கனவே சிவக்குமார் ரத்தம் சொல்லவா வேண்டும்? சூர்யா கூட இந்தளவுக்கு பேசுவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் கார்த்தியை பொறுத்தவரைக்கும் சினிமாவில் ஒரு நல்ல அனுபவம் மிக்க கலைஞராகத்தான் இருந்து வருகிறார்.

சமீபத்தில்தான் அவர் நடித்த மெய்யழகன் படம் ரிலீஸானது. 96 படத்தை இயக்கிய பிரேம்தான் மெய்யழகன் படத்தையும் இயக்கினார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால் கதை அனைவரும் பாராட்டி வந்தார்கள்.

96 படம் ஒரு காதல் பின்னணியில் அமைந்த படமாக இருந்த காரணத்தினால் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் மெய்யழகன் படம் ஊரை விட்டு பொழப்புக்காக வெளியூர் வந்த ஒருவரின் பின்னணி கதையில் டிராவல் செய்யும் படமாக அமைந்தது.

மெய்யழகன் படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்த நிலையில் மெய்யழகன் பட பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கார்த்தி ஜோதிகாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

அதாவது ‘ நேற்று முன் தினம் தான் அண்ணி மெய்யழகன் படத்தை பார்த்தாங்க. ஒரு புரொடியூசரா இருந்துகிட்டு ரிலீஸூக்கு முந்தைய நாள் பார்க்க வேண்டாமா? பொறுப்பு வேண்டாம்?’ என எதார்த்தமான தன் பேச்சால் ஜோதிகாவை கிண்டலடித்தபடி பேசினார் கார்த்தி.

படத்தை பார்த்துவிட்டு வியாபாரத்துக்கு படம் பண்ணினாலும் இந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வரவேண்டும். இப்படிப்பட்ட கதைகளில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கார்த்தியிடம் ஜோதிகா கூறினாராம்.

Next Story