கார்த்தியோட அடுத்தடுத்த படம் குறித்த பரபர அப்டேட்... சூட்டிங் எங்கே தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:10  )

ஒரு படத்தின் வெற்றியைப் பொருத்துத் தான் அடுத்தடுத்த படங்களில் அந்தக் கூட்டணி தொடர்கிறது. அந்த வகையில் மெய்யழகன் படத்தின் இயக்குனர் மீண்டும் கார்த்தியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான மெய்யழகன் இயக்குனர் பிரேம்குமாருக்கு 96 படத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்கான வெற்றியே அடுத்தப் படத்திலும் இவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க கார்த்தி, அரவிந்தசாமி உடன் ஸ்ரீதிவ்யாக இணைந்து நடித்த படம் மெய்யழகன். படத்தில் எப்போ பார்த்தாலும் கார்த்தியும், அரவிந்தசாமியும் பேசிக்கிட்டே தான் இருக்காங்கப்பான்னு சொன்னாலும் அது ரசிக்கும்படியாக இருந்தது. அங்கு தான் இயக்குனர் நிற்கிறார் என்ற ஒரு தனித்துவத்தைக் காட்டி விட்டார் பிரேம்குமார்.

அந்த வகையில் மெய்யழகன் படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இன்னொரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தாராம். அதை அவர் கார்த்தியிடம் சொல்ல, அதைக் கேட்டதும் 'அட சூப்பரா இருக்கே... நானே நடிக்கிறேன்'னு சொல்லிட்டாராம். அது ஒரு வரலாற்றுப்படம் என்றும் சொல்லப்படுகிறது.அதனால மீண்டும் அந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கிறதாம்.

நடிகர் கார்த்தி சமீபத்தில் நடித்த படம் மெய்யழகன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரோட சர்தார் 2 படம் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. திடீர்னு அந்தப் படத்தோட சூட்டிங்கை நிறுத்தி வச்சிருந்தாங்களாம். மெய்யழகன் படத்தோட ரிலீஸ், புரொமோஷ்ன் தான் அதுக்குக் காரணமாம்.

இப்போ மறுபடியும் படத்தை ஆரம்பிச்சிட்டாங்களாம். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம். அது இன்னும் ஒரு மாசத்துக்கு எடுக்க இருக்காங்களாம். படத்துல 2 கதாநாயகிகள். மாளவிகா மோகன், ஆஷிகா ரகுநாத்.

கன்னடத்துல புகழ்பெற்ற நடிகை தான் ஆஷிகா ரகுநாத் என்றும் தெரியவருகிறது. 2022ல் வெளியான சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது.

Next Story