திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.. கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் கார்த்திக். பருத்திவீரன் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான கார்த்தி முதல் படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபோனார்.
உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகர் ஆனவர் கார்த்தி. கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாரின் மெய்யழகன் படத்திலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இந்த நிலையில் அவருடைய ஒரு அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீபத்தில் கார்த்தியின் நற்பணி மன்றம் சார்பாக அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் கொடுத்து வருகின்றனர். அதற்காக அவர்களுடைய ரசிகர்களை பாராட்டும் விதமாக நேராக ரசிகர்களை சந்தித்து தன்னுடைய நன்றியை தெரிவித்தார் கார்த்தி.
இந்த நிலையில் அவர் கொடுத்த அப்டேட் தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் அவர் கூறியது இப்போது நான் நடித்த இரண்டு படங்களுமே நிறைவடைந்து விட்டது. அந்த இரண்டு படங்களும் இந்த வருடம் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.
அடுத்ததாக லோகேஷ் என்னை படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். மறுபடியும் பிரியாணி பக்கெட் சாப்பிட நேரம் வந்துடுச்சு என்ற ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது இப்போது லோகேஷ் ரஜினியின் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். கார்த்தி சொன்னதை பார்க்கும்போது கூலி படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படமாக கைதி 2 திரைப்படம் அமையும் என சொல்லப்படுகிறது.