ரோலக்ஸை வைத்து சம்பவம் செய்யப் போகும் கார்த்தி... கைதி 2 பரபர அப்டேட்!...
கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. என்ன பேசுனாருன்னு பார்க்கலாமா...
அண்ணாவுடைய படங்கள் நிறைய முதல்ல போட்டோ எடுக்கும்போது பார்த்துருக்கேன். முதல் படம் நந்தா. ஒவ்வொரு படத்தோட லுக் பார்க்கும்போது ரொம்ப பாசிடிவ்வா இருக்கும். நந்தா, ஆறு, காக்க காக்க, சஞ்சய் ராமசாமி (கஜினி) இப்படி ஒவ்வொரு கேரக்டர்ஸ்சும் பார்க்கும்போது ரொம்ப பாசிடிவ்வா இருக்கும்.
சிங்கத்துல எலுமிச்சம்பழ மாலையைப் போட்டுக்கிட்டு கையில அரிவாளோட இருக்கும் போஸ் பார்த்தேன். பார்த்த உடனே இந்தப் படம் பெரிசா இருக்கும்னு ஃபீலிங் வந்துச்சு.
அதே மாதிரி கங்குவாவோட பர்ஸ்ட் லுக் ரொம்ப ரொம்ப ஸ்டன்னிங்கா இருந்தது. ஒவ்வொரு நாளும் அந்தப் படத்துல வேலை செஞ்சவங்க 2 வருஷம் கழிச்சும் இந்தப் படம் போரடிக்கவே இல்லன்னு சொன்னாங்க. அந்த வகையில இந்தப் படம் ஆசிர்வதிக்கப்பட்ட படம்னு தோணுச்சு.
இது மாதிரி எடுக்கறது அவ்வளவு ஈசி கிடையாது. அண்ணாவைப் பத்தி எனக்குத் தெரியும். ஆடியன்ஸ்சுக்கு இது பத்தாதுன்னு எஃபோர்ட் போட்டுக்கிட்டே இருப்பாரு. அண்ணாவை முதல்ல நடிக்கத் தெரியல. டான்ஸ் ஆடத்தெரியல. நல்ல பாடி இல்லன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் டிரைனிங் போனாரு.
விக்ரம் தர்மாவே உங்க அண்ணன் என்னப்பா பைட்டர் மாதிரி பண்றாருன்னு கேட்டாரு. எதை எல்லாம் நெகடிவ்னு சொன்னாங்களோ அதை எல்லாம் பாசிடிவ்வா மாத்த முடியும். உனக்கு எதுவுமே தெரியல்லன்னாலும் மனசு வச்சா மேலப் போக முடியும்கறதுக்கு நம்ம அண்ணனைத் தவிர வேற ஆளு இல்லன்னு சொல்லலாம்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறணும்னு வேண்டிக்கறேன். சிறுத்தை சிவா எல்லா ஆர்டிஸ்டையும் ஒரே மாதிரி நடத்துவாரு. இவ்ளோ பெரிய படத்துக்கும் அருமையான எமோஷன் வச்சிருக்காரு. ரோலக்ஸ்னு கத்துற மாதிரி கங்குவான்னு கத்தணும்.
கைதி 2 அடுத்த வருஷம் பண்ணிருவோம். ரோலக்ஸை நேரில பார்க்கணும்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கைதி 2 படத்துல சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் வருவதாக சொல்லப்படுகிறது.