குஷ்பூ கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத கார்த்திக்! இந்தளவு லவ்வா? நீண்ட நாளுக்கு பிறகு வெளிவந்த ரகசியம்
ஆன் ஸ்கிரீனில் சிறந்த ஜோடியாக இருந்தவர்கள் நடிகர் கார்த்திக் மற்றும் குஷ்பு. ரியல் ஜோடிகளாகவும் இவர்கள் மாற மாட்டார்களா என்ற அளவுக்கு ரசிகர்களை ஏங்க வைத்தவர்கள். அந்த அளவுக்கு இவர்களின் கெமிஸ்ட்ரி படங்களில் மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது. இவர்கள் இருவரும் நம்ம பூமி, கிழக்கு வாசல், வருஷம் ௧௬, போன்ற பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக வருஷம் 16 படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தில் கார்த்திக் மட்டும் தான் தேம்பித் தேம்பி அழுதார் என்ற ஒரு ரகசியத்தை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்
தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் குஷ்பூ சுந்தர் சி .கிட்டதட்ட ஐந்து வருட காதலுக்கு பிறகு இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்தது. முறைமாமன் படத்தில் குஷ்புவை நடிக்க வைத்ததன் மூலம் அந்த படத்தில் இருந்து இருவருக்குமான காதலும் மலர்ந்தது.
அதன் பிறகு 5 வருடங்கள் இருவரும் காதலிக்க கடைசியில் திருமணத்தில் இவர்கள் இருவரும் இணைந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சிறந்த நட்சத்திர ஜோடிகளாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் குஷ்பூவும் சுந்தர்சியும். இந்த நிலையில் இவர்கள் திருமணத்திற்கு கார்த்திக் வந்திருந்தாராம் .
அப்போது திருமணத்திலேயே இவர்களை பார்த்து தேம்பித் தேம்பி அழுதாரம் கார்த்திக். ஏனெனில் இவர்களின் காதல் ரகசியங்கள் எல்லாமே கார்த்திக்கும் தெரியுமாம். அதனால் இவர்களின் காதல் கைகூடுமா கூடாதா என்ற ஒரு பயம் கார்த்திக்குக்கும் இருந்திருக்கிறது. முதன் முதலில் திருமண செய்தியை கார்த்திக்கிடம் தான் சுந்தர்சியும் குஷ்புவும் சொல்லி இருக்கிறார்கள்.
அப்போதும் அதை கேட்டு ஆனந்தத்தில் அழுதாராம். அதே ஒரு சென்டிமென்ட் தான் இவர்களின் திருமணம் நடந்து விட்டது என்ற ஒரு ஆனந்தத்தில் இருவரையும் பார்த்து அழுதாராம் கார்த்திக். அதன் பிறகு சுந்தர் சி யும் குஷ்புவும் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க என் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் என் காலில் விழுகிறார்கள் என நினைத்து அப்போதும் அழுது கொண்டே தான் ஆசீர்வாதம் செய்தாராம் கார்த்திக். இதை அந்த பேட்டியில் குஷ்பூ கூறினார்.