பாசிசம்.. பாயாசமா?!.. விஷத்தை கக்கும் விஜய் ஒரு பாதரசம்!.. பொங்கியெழுந்த நடிகர்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Vijay TVK: அப்பாவின் உதவியால் மட்டுமே சினிமாவுக்கு வந்தவர் விஜய். நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் அறிமுகமாகி சில படங்களில் கவர்ச்சி காட்சிகளில் நடித்தாலும், தூக்கலான கவர்ச்சி காட்டும் நடிகையோடு நடனமாடினாலும் விஜயின் படங்கள் செல்ப் எடுக்கவில்லை. அதன்பின் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்தார். அதுதான் அவர் மீது ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த இமேஜை மாற்றியது.

அதன்பின் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். காதல் கதை மற்றும் ஆக்சன் படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக மாற்றிக்கொண்டார். விஜயிடம் இருக்கும் நடனத் திறமை அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. விஜயை போல நடனமாட முடியாது என பல நடிகர்களே சொன்னார்கள்.

விஜய் இப்போது 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். கோட் படத்தில் அவர் 200 கோடி சம்பளம் பெற்றார். இப்போது நடித்து வரும் ஜனரஞ்சகன் படத்திற்கு அதை விட அதிக சம்பளம் என சொல்லப்படுகிறது. விஜய் பல வருடங்களாகவே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார்.

அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி மாநாட்டையும் நடத்தினார். அந்த மாநாட்டில் பேசிய விஜய் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். ‘மத்திய அரசு பாசிசம்னா.. நீங்க என்ன பாயாசமா?’ என கேட்டார். திமுகவின் ஆட்சியை அகற்றுவேன் எனவும் ஆவேசமாக பேசினார்.

சமீபத்தில் தவெக கட்சி துவங்கி 2ம் வருடத்தில் காலெடுத்து வைத்தது தொடர்பான நிகழ்ச்சியிலும் திமுகவை விமர்சித்தே பேசினார். இந்நிலையில், நடிகர் கருணாஸ் விஜயின் அரசியல் நடவடிக்கை குறித்து பேசியிருக்கிறார். பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பாதரசம் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறது. பாதரசம் மக்களிடம் ஒட்டாது. விஷத்தை கக்கக் கூடிய கொடிய திராவகம் இந்த பாதரசம். இந்த பாதரசம் தங்கம், வெள்ளியை உருக்குலைக்கும். நல்லா இருக்கும் நாட்டை கெடுக்க இதுபோன்ற பாதரசத்தை பாசிசங்கள்தான் உருவாக்குகிறது’ என பேசியிருந்தார்.

விஜய் பாஜக பற்றி அதிகம் பேசுவதில்லை. நேரிடையாக மத்திய அரசை விமர்சித்து அவர் பேசுவதே இல்லை. மறைமுகவோ அல்லது மழுப்பலாகவோத்தான் பேசுகிறார். சமீபத்திய விழாவிலும் அப்படித்தான் பேசினார் என அவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில்தான் அவரை உருவாக்கியதே பாசிசம்தான் என கருணாஸ் பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment