காதலர்களை ஓட விடும் கவின்!.. லவ்வர் பாயை இப்படி ஆக்கிட்டீங்களே.. வெளியான 'Kiss' டீசர்!..

Actor Kavin: தமிழ் சினிமாவில் சின்னதிரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவானார். இருப்பினும் அந்த திரைப்படம் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான கவின் அதன் பிறகு லிப்ட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து வெளியான டாடா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில் கடைசியாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான ப்ளடி பக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. நெல்சன் தயாரித்திருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
கவின் லைன்அப்: நடிகர் கவின் தற்போது தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். ஏற்கனவே ஹாய், மாஸ்க் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனராக இருந்த சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
கிஸ் திரைப்படம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்து வந்த சதீஷ் கிஸ் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் அயோத்தி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரித்து வருகின்றார். மேலும் இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசை அமைத்திருக்கின்றார்.
கிஸ் படத்தின் டீசர்: தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் காதலர் தினமான இன்று மாலை 5.04 வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது.
இந்த டீசரில் நடிகர் கவின் காதலர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போல் காட்டியிக்கிறார்கள். கவின் ஒவ்வொரு காதலர்களையும் ஓட ஓட விரட்டுகின்றார். அது மட்டும் இல்லாமல் காதலர்களையும் காதலர் தினத்தையும் எதிர்க்கும் ஒரு நபராக கவினை இப்படத்தில் காட்டி இருக்கும் நிலையில் அவர் எப்படி காதலை வெறுத்தார், கடந்த காலத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பதை விவரிப்பது போல் இந்த டீசர் அமைந்து இருக்கின்றது.