ஒரே அசிங்கமா போச்சு குமாரு!.. ஏமாந்த மாதவன்.. அவரே பகிர்ந்த கதைய கேளுங்க..!

Actor Madhavan: தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதிலும் இவர் நடித்த அலைபாயுதே திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக கனவு நாயகனாக வளம் வந்தார். அறிமுக திரைப்படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்த மாதவனுக்கு அடுத்தடுத்து ஏகப்பட்ட திரைப்படங்களின் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
அலைபாயுதே திரைப்படம் மாதவனுக்கு மட்டும் அல்லாமல் நடிகை ஷாலினிக்கும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மாதவன் நடிப்பில் 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கின்றது.
மாதவன் திரைப்படங்கள்: என்னவளே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம், நளதமயந்தி என்று பல்வேறு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த காரணத்தாலும் புது நடிகர்களின் வரவாலும் பீல்ட் அவுட் ஆகினார் மாதவன்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். தற்போது தமிழில் அதிர்ஷ்டசாலி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களிலும், ஹிந்தியில் நான்கு திரைப்படங்களிலும் நடிகர் மாதவன் பிஸியாக நடித்து வருகின்றார்.
மாதவன் பேட்டி: சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் தனது காதல் கதை குறித்து சுவாரசியமாக பேசியிருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் பகிர்ந்திருந்தார். தற்போது சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் ஏ.ஐ டெக்னாலஜி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை பார்க்கும் போது அப்படியே உண்மையான புகைப்படம் போல இருக்கின்றது. சினிமாவில் இந்த டெக்னாலஜியை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இறந்தவர்களை அப்படியே திரையில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். இந்திய சினிமாவில் ஏஐ டெக்னாலஜி வந்ததற்குப் பிறகு பல நடிகர்களை திரையில் நம்மால் காண முடிகின்றது.
இந்த டெக்னாலஜியை வைத்து போலியாக செய்யப்பட்ட ஒரு விஷயத்தை உண்மை என நம்பி மாதவன் அசிங்கப்பட்ட நிகழ்வை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'ஒருமுறை நான் ரொனால்டோ விராட் கோலியை புகழ்ந்து பேசுவது போன்ற ஒரு வீடியோவை பார்த்தேன். அதை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
உடனே நான் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். அதன் பிறகு விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்காவிடம் இருந்து தனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவர் அது ஒரு ஏஐ வீடியோ என்று கூறியிருந்தார். எனக்கு ஒரே அசிங்கமாக போச்சு.. என்னை போல் சினிமா துறையில் இருப்பவர்களே இதுபோல சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதனால் எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.