‘சூர்யவம்சம்’ படத்தில் பேரன் கேரக்டரில் நடிக்க இருந்தவர் இந்த நடிகரா? வாயாலயே கெடுறது இதுதான்

by ராம் சுதன் |

சரத்குமார் கெரியரில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படமாக அமைந்தது சூர்யவம்சம் திரைப்படம். இந்தப் படத்தை விக்ரமன் இயக்க சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகா,தேவயாணி போன்றோர் நடித்திருந்தார்கள். படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. சொல்லப்போனால் சரத்குமாரின் ஹிட் லிஸ்ட்டில் சூர்யவம்சம் திரைப்படம்தான் முதலிடத்தில் இருக்கும்.

அந்தளவுக்கு படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. சூர்யவம்சம் படத்தில் எத்தனையோ சீன்கள் ரசிக்கும் படியாக இருந்தாலும் தாத்தாவுக்காக பேரன் பாயாசம் கொண்டு வரும் சீன்தான் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. இந்த சீனை ரி கிரியேட் செய்து பல ரியாலிட்டி ஷோக்களில் காமெடி நடிகர்கள் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்த பேரன் கேரக்டரில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஹேமா. இவர் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும் நடித்திருக்கிறார். இருந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலில் இவர்தான் லீடு ரோலில் நடித்திருப்பார். இது ஒரு பக்கம் இருக்க முதலில் இந்த பேரன் கேரக்டரில் நடிக்க இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன் என்ற ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகின்றது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக மாஸ்டர் மகேந்திரன் வந்தாராம். அப்பவே மாஸ்டர் மகேந்திரன் என்ன ஷாட், என்ன மாதிரியான கேமிரா ஆங்கிள் என கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தாராம். இதில் கடுப்பான இயக்குனர் விக்ரமன் இந்த பையனே வேண்டாம் என சொல்லிவிட்டு மாஸ்டர் மகேந்திரனை அனுப்பிவிட்டாராம்.

அதன் பிறகுதான் அந்த கேரக்டரில் ஹேமா நடித்திருக்கிறார்.ஏற்கனவே ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் மாஸ்டர் மகேந்திரன் கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பையும் தன் வாயாலேயே கெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் இப்போது அவருக்கான ஒரு படம் என்று அமையவே இல்லை. அவருக்கான ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களில் ஒரு சில பேர் சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள். உதாரணமாக மீனா, ஸ்ரீதேவி இவர்களை சொல்லலாம்.

Next Story