ரசிகர்களிடம் அஜித் பேர சொல்லி வேலை வாங்கிய மயில்சாமி! அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?

by ராம் சுதன் |

அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை என்றாலும் அவருக்காக ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். இதுவரை எந்த நடிகர் மீதும் இந்தளவு ஒரு பைத்தியக்காரத்தனமான பாசத்தை ரசிகர்கள் வைத்ததில்லை. சூர்யா, கார்த்தி போன்றவர்கள் எல்லாம் நேராக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் வீட்டு விழாக்கள், துயர சம்பவங்கள் என அனைத்திலும் கலந்து கொண்டாலும் அஜித்துக்கு இருக்கிற ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ் மாதிரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரசிகர் மன்றம் கிடையாது. யாரையும் வந்து சந்திப்பதும் கிடையாது. பொது விழாக்களிலும் கலந்துகொள்வது கிடையாது. இப்படி இருக்கும் ஒருவர் மீது ஏன் இந்தளவு ஒரு பாசம் என ஒட்டுமொத்த கோலிவுட்டுமே பிரமித்து போயிருக்கிறார்கள். சொல்லப்போனால் ரசிகர்களின் பாசத்தை அறிந்துதான் அஜித் வெளியே வருவது இல்லை. அதனால் ஏதும் விபரீதம் வந்துவிடுமே என்ற ஒரு பயம்தான்.

இந்த நிலையில் மயில்சாமி சொன்ன ஒரு விஷயம் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது 2015 ஆம் ஆண்டு சென்னையை மழைவெள்ளம் சூழ்ந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து மீண்டு வர சென்னை மக்கள் பட்ட அவஸ்தையை யாரும் மறந்து விட முடியாது. அவர்களுக்கு உதவ பல பிரபலங்கள் இறங்கி வேலை செய்தார்கள்.

இளம் தலைமுறை நடிகர்கள் போட்டில் சவாரி செய்து உணவுகளை வழங்கி உதவி செய்தனர். இதில் மயில்சாமி கிட்டத்தட்ட 18 நாள்கள் அவருடைய ஏரியாவில் இருக்கும் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தாராம். அவருடன் சேர்ந்து உதவி செய்ய சுமார் 20 பேர் தேவைப்பட்டார்களாம். அதனால் அந்த 20 பேரிடம் மயில்சாமி ‘என் கூட இருந்து இந்த பணி செய்தால் அஜித் கூட நின்றுபோட்டோ எடுக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன்’ என கூறினாராம்.

அஜித் பேரை சொன்னதும் அத்தனை பேரும் இறங்கி வேலை பார்த்தார்களாம். இதற்கு அவர்கள் என்னை நம்பியதுதான் காரணம். ஏனெனில் மயில்சாமி சொன்னதை செய்வான் என அனைவருக்கும் தெரியும். அதனால் ஒரு நாள் அஜித்தை பார்த்தால் அவருடன் போட்டோ எடுக்க வாய்ப்பு கேட்க வேண்டும் என முன்பு சொன்ன அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

Next Story