More
Categories: Cinema News Flashback

நீ அங்கே போகக்கூடாது!.. நடிகையின் பெட்டியை மறைத்து வந்த எம்.ஜி.ஆர்!…

Mgr : எம்.ஜி.ஆர் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களின் நலன் மீது அக்கறையோடு இருப்பார். சின்ன நடிகர், பெரிய நடிகர் என்கிற பாரபட்சமெல்லாம் அவரிடம் இருக்காது. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர் அவர். சிறு வயது முதலே வறுமையை பார்த்து வளர்ந்ததால் நிறைய பணம் சம்பாதித்த நேரத்திலும் அவர் எப்போதும் தன்னை பணக்காரனாக உணர்ந்தது இல்லை.

பணம் தேவைக்கு மற்றும் மக்களுக்கு கொடுப்பதற்கு என்றே வாழ்ந்தவர் அவர். அதனால்தான் உதவி என கேட்டு வந்த பலருக்கும் அவர் பணத்தை அள்ளி கொடுத்தார். அதனால்தான் மக்கள் அவரை வள்ளல் என அழைத்தார்கள். நாடகங்களில் 30 வருடங்கள் நடித்துவிட்டு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறினார்.

Advertising
Advertising

துவக்கத்தில் சரித்திர படங்களில் மட்டுமே நடித்து வந்த எம்.ஜி.ஆர் அதன்பின் சமூக படங்களிலும் நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆர் படங்களில் புரட்சிகரமான வசனங்கள் இருக்கும். அதோடு, சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும். அதோடு, தத்துவ பாடல்களும், புரட்சிகரமான வரிகளை கொண்ட பாடல்களும் இருக்கும்.

அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை அவர் சினிமாவில் எடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவிதான். அவருக்கு பின் ஜெயலலிதா அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

அதேபோல், லதா, மஞ்சுளா உள்ளிட்ட சில நடிகைகளும் எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவரும் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர்தான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ஒரு தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர் படம் ஒன்றில் ஐஸ்கட்டி மீது படுத்து நடித்தேன். எனவே, எனக்கு தும்மலும், இருமலும் இருந்தது. அப்போது நான் ஒரு விஷயத்திற்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. ஆனால், எம்.ஜி.ஆரோ ’உனக்கு நிமோனியா வந்துவிடும். டெல்லிக்கு போகாதே’ என சொன்னார். நானோ ‘நிச்சயம் நான் போவேன்’ என சொன்னேன். ஷூட்டிங்கிலிருந்து அப்படியே டெல்லி செல்ல நினைத்தேன். ஆனால், என் பெட்டிகளை காணவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்டால் அதை எம்.ஜி.ஆர் எடுத்து வைத்திருக்கிறார் என சொன்னார்கள். ‘நீ இந்த நிலையில் போனால் உனக்கு உடம்பு முடியாமல் போய்விடும்’ என சொல்லி என்னை டெல்லி போகவிடாமல் தடுத்துவிட்டார்’ என அவர் கூறினார்.

Published by
ராம் சுதன்

Recent Posts