Thalapathy vijay: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும் திடீரென ஒரு மொக்கை படத்தில் நடிப்பார். எந்த நடிகரும் இந்த படம் ஓடாது என நினைத்து நடிக்க மாட்டார்கள். சில படங்களை மட்டுமே அப்படி அப்படத்தில் நடிக்கும் நடிகர்களே கணிப்பார்கள். ஆனால், நடப்பது வேறுமாதிரி இருக்கும்.
ராஜாதி ராஜா படத்தில் நடித்தபோது அந்த படம் ஓடாது என்றே ரஜினி நினைத்திருக்கிறார். ஆனால், அப்படம் மிகப்பெரிய வெற்றி. ஏனெனில், இயக்குனர் சுந்தர்ராஜன் ரஜினி சொன்ன எதையும் கேட்கவில்லை. ஒரு படம் உருவாகும்போது இயக்குனருகும், நடிகருக்கும் இடையே உருவாகும் உறவு மிகவும் முக்கியம்.
அது சரியாக இல்லை எனில் படம் சரியாக வராது. சிலசமயம் இயக்குனர் கதை சொல்லும்போது பிரம்மாதமாக இருக்கும். நடிகரும் நம்பி ஆர்வமாக நடிப்பார். ஆனால், சொன்னதை அப்படியே இயக்குனர் திரையில் கொண்டு வராமல் சொதப்பி இருப்பார். படமும் தோல்வி அடையும்.
விஜய் அப்படித்தான் சுறா என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தை எஸ்.பி.ராஜ்குமார் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு முதல் நாளே கூட்டமில்லாமல் போனது. ‘படம் படு மொக்கை’ என எல்லோரும் விமர்சிக்க வசூலில் மண்ணை கவ்வியது. விஜய்க்கு ஓவர் பில்டப் கொடுத்து பல காட்சிகளை வைத்திருந்ததே அதற்கு காரணம்.
இப்போது வரை விஜயை கலாய்க்க நினைப்பவர்கள் இந்த படத்தின் பெயரையே பயன்படுத்துவார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு விஜயின் அப்பா எஸ்.ஏ.சி அப்பட இயக்குனரை கண்டபடி திட்டியதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. இந்நிலையில், மறைந்த காமெடி நடிகர் மனோபாலா ஊடகம் ஒன்றில் இப்படம் பற்றி பேசியிருக்கிறார்.
விஜயிடம் ‘இந்த சுறாங்கிற படத்துல ஏன் நடிச்ச?’ என ஒரு முறை கேட்டேன். அதற்கு விஜய் ‘அதை ஏன்ணே கேட்குறீங்க?.. வந்தாங்க.. அவன அடிச்சி தரையில போடாம ஏன்டா தண்ணியில போட்டீங்க. அவன் சுறா மாதிரி வருவான்டா’ அப்டின்னு எக்கோவோட சொன்னாங்க. அதை கேட்டுத்தான் நடிச்சேன்’ என சொன்னார். அதற்கு நான் ‘டேய் அது ஒரு சீன்.. அதுவே படத்தின் கதை இல்ல’ என சொன்னேன்’ என சொல்லி இருக்கிறார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…