இனிமே இந்த கேள்வியை வேறெந்த நடிகர்கிட்டயும் கேட்ப? ஆங்கரை முக்குடைத்த எம்.எஸ்.பாஸ்கர்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சின்ன பட்ஜெட் படங்கள் வரை இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. எல்லா நடிகர்களின் படங்களிலும் எம்.எஸ். பாஸ்கரை பார்க்க முடியும். சமீபத்தில் வெளியான போட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

யோகிபாபு லீடு ரோலில் நடிக்கும் போட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இவர் ஏற்று நடிக்கும் கேரக்டர் அந்தப் படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும். இவர் நடித்து பெரிய வெற்றிப் பெற்ற பார்க்கிங் திரைப்படத்தை இதுவரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

இரு ஹீரோ சப்ஜெக்ட் என்றே சொல்லலாம். ஒரு பக்கம் ஹரீஸ் கல்யாண். இன்னொரு பக்கம் எம்.எஸ்.பாஸ்கர். படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை இதுவரை யாரும் அப்படி பார்த்திருக்க மாட்டோம். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதைப் போல எட்டுத் தோட்டாக்கள் படம் மக்களை எதிர்பார்த்த அளவு திருப்திப்படுத்தவில்லை என்றாலும் இவரின் நடிப்பு அனைவரையும் பிரமிக்கவைத்தது. படத்தில் இவர்தான் ட்விஸ்ட் என்பதைப் போல படத்தின் மையக்கருவே எம்.எஸ்,பாஸ்கரிடம் இருந்தது.

இப்படி தமிழில் ஏகப்பட்ட படங்களில் இவரின் கேரக்டர் பெரிய அளவு பேசப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் போட் படத்திற்காக புரோமோஷனில் கலந்துகொண்ட எம்.எஸ்.பாஸ்கரிடம் ஆங்கர் ஒருவர் ‘எட்டுத்தோட்டாக்கள் மற்றும் பார்க்கிங். இந்த படங்களில் எது உங்களுக்கு பிடித்த படம்?’என்று கேட்டார்.

அதற்கு எம்.எஸ்.பாஸ்கர் ‘இந்த நேரத்தில் ஒன்னு சொல்லனும். பார்க்கிங்தான் பிடித்திருந்தது என்று சொன்னால் என்னுடைய மகன் ஸ்ரீகணேஷ் என்னிடம் வந்து அப்பா எட்டுத்தோட்டாக்கள் படம் பிடிக்கவில்லையா என்று கேட்பான்’

‘எட்டுத்தோட்டாக்கள் தான் பிடித்திருந்தது என்று சொன்னால் பார்க்கிங் இயக்குனர் என்னிடம் வந்து பார்க்கிங் படம்பிடிக்கவில்லையா என்று கேட்பான். இதுலயே தெரியலையா? இந்த கேள்வி வில்லங்கமான கேள்வி என்று?’ என கூறினார்.

இந்த பதில் மூலம் ஒட்டுமொத்த ஆங்கருக்கும் பதில் சொல்லியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஏனெனில் பேட்டி கொடுக்கும் எல்லா நடிகர்களிடமும் இந்த மாதிரியான ஒரு கேள்வியைத்தான் ஆங்கர்கள் கேட்டு வருகின்றனர்.

Next Story