என்னது ரஜினிக்கு வில்லனா? ‘கூலி’ படத்தில் இருந்து பின்வாங்கிய நடிகர்

by ராம் சுதன் |

கூலி படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு ரஜினியை படு மாஸாக காட்டியிருப்பார் நெல்சன். வசூலில் பெரும் சாதனையை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி இயக்குனர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக வேட்டையன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது,

வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அது ஒரு சமூக கருத்தை உள்ளடக்கிய திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜெய்பீம் என்ற ஒரு தரமான படத்தை கொடுத்த த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் தயாராகி இருக்கிறது. அதனால் ஜெய்பீம் படத்தை போலவே ஏதாவது ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்துக் கூட படத்தை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. பக்கா ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கமலுக்கு எப்படி விக்ரம் என்ற ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை கொடுத்தாரோ அதே போல் ரஜினிக்கும் அவர் கெரியரில் மறக்க முடியாத படமாக இந்த கூலி திரைப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதை போல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும் கூலி படத்தில் இணைந்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி கூலி படத்தில் இருந்து நாகர்ஜூனா விலகியதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லனாக நாகர்ஜூனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாகவும் வில்லனாக முடியாது என நாகர்ஜூனா சொன்னதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Next Story