பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாகசைதன்யா திருமணம்.. தடபுடலாக தயாராகும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள்

by ராம் சுதன் |

தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் நாகர்ஜூனா. இவரது மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் தெலுங்கு உலகில் மிகவும் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல நடிகையான அமலாவை காதலித்து திருமணம் செய்து நாகர்ஜூனாவிற்கு இரண்டு மகன்கள்.

அவர்களின் மூத்த மகன் தான் நாகசைதன்யா. இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு செகண்ட் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானார்கள். அதே படம் தெலுங்கில் ரீமேக் ஆக அந்தப் படத்தில் இவர்கள்தான் லீடு ரோல்களில் நடித்தனர்.

அதிலிருந்தே இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அதன் பின் இருவரும் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடிக்க அந்த நட்பு காதலாக மாறியது. அதன் பிறகு இருவரது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணமாகி இரண்டே வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் சமந்தா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். நாகசைதன்யா இரண்டாவது திருமண வேலைகளில் இறங்கினா. இந்த நிலையில் இன்று நாகசைதன்யாவிற்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அவர் திருமணம் செய்ய போகும் அந்த பெண் வேறு யாருமில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த சோபிதா தான். அவரைத்தான் நாகசைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்ய போகிறார். அவர்கள் இருவருக்கும் ஐதராபாத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாகசைதன்யா திருமணம்.. தடபுடலாக தயாராகும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள்ஆனால் இதுவரை நாகசைதன்யா மற்றும் சோபிதா தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

Next Story